பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பொருளதிகாரம் 959–12 பின்பனி தானு முரித்தென மொழிப. 12 960–13 இருவகைப் பிரிவு' நிலைபெறத் தோன்றலும்’ உரிய தாகு மென்மனார் புலவர். 六丑岛 பா.வே. 1. பதிப்பு 50இல் இருவகை என இருப்பது அச்சுப்பிழை. பகரமெய் விடுபட்டது. 2. பிரிவினும் - சுவடி 115. பிழை. பொருட்பொருத்தம் இல்லை. 3. தோன்றினும் - நச்சர், சோம. பாடம். சுவடி 73.115. இதுவே. 961-14 திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே நிலனொருங்கு மயங்குத லில்லென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே. 14 பா.வே. o 1. மயங் குறுதலும் - சுவடி 105, 1066 பதிப்பு 17 பதிப்பு 22இல் சு.வே. 2. இன்றென - நச்சர். பாடம் இலவென - சுவடி 53, 1066 பிழை. மயங்குதல் - ஒருமை எழுவாய்.

டி இந்நாற்பா முதல், முதல் எனப்படுவ என்பது வரையான ஏழு தத்திரங்களின் வரிசை பற்றி மு.அ.டபிள்ளை கூறுவதாவது: ஆசிரியர் நூல் செய்து ஏறத்தாழ ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் கழிந்த பின்னரே இளம்பூரணர் முதலானோர் இந்நூலுக்கு உரையெழுத முற்பட்டனர். இவர்களுக்கு முன்னர் இந்நூலைக் கற்றோரும். கற்பித்தோரும், கையால் எழுதினோரும் ஆக எத்துணையோ ஆயிரவர் இருந்தனராதல் வேண்டும். அவ்விடைக்காலங்களில் தொல்காப்பிய நூற்பாக்களில் என்னென்ன மாற்றங்கள் நேர்ந்தனவென்று முழுதும் நம்மால் இப்பொழுது அறிய முடியவில்லை என்றாலும் உரையாசிரியர் காலத்திற்கு முன்பே சிலபல நூற்பாக்கள் இடமாறி யெழுதப்பட்டும் சேர்க்கப்பட்டு மிருந்தனவென்று எண்ண இடமிருக்கின்றது. அங்கனம் இடமாற்றம் பெற்ற நூற்பாக்களில், இருவகைப்பிரிவும் என்ற இந்நூற்பா முதல், முதலெனப்படுவ தாயிரு வகைத்தே என்ற நூற்பா வரையுள்ள ஏழு நூற்பாக்களும் அடங்கும். களவியல் கற்பியல்களிலும் இவ்வாறு இடமாற்றம் பெற்ற நாற்பாக்கள் சிலவுள்ளன. ... மாற்றி எழுதப்பட்டும் கோக்கப்பட்டும் ஏட்டில் இருந்தவாறே இளம்பூரணர் முதலானோர் உரையெழுதத் தொடங்கியமையால் ஆற்றொழுக்காக ஆசிரியர் அமைத்திருந்த நூற்பாக்களுக்கு இடர்ப்பட்டுப் பொருள்கூற வேண்டிய இன்றியமையாமை நேர்ந்தது. இருவகைப்பிரிவும் என்றது முதல் ஏழு நூற்பாக்களும் மேற்காட்டிய உரைகளில் உள்ளவாறன்றி. முதலெனப்படுவது. திணைமயக் குறுதலும், உரிப்பொருளல்லன. புணர்தல் பிரிதல், இருவகைப் பிரிவும், கொண்டுதலைக் கழிதலும், கலந்த பொழுதும் என இவ்வாறு இருத்தல் வேண்டும். (பதிப்பு 50 பக் 138-139) ---