பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தினையியல் 189 962–15 உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே. I5 96.3—16 புணர்தல் பிரித லிருத்த லிரங்கல் ஊட லவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. I 5 பா.வே. 1. லிவற்றின் - நச்சர். சோம. பாடம். சுவடி 73, 115 இதுவே. 964-17 கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவ னிரங்கலும்' உண்டென மொழிப வோரிடத் தான. I7 பா.வே. 1. கழியினும் - நச்சர் பாடம். சுவடி 73, 115 + = .ே இரங்கினும் - நச்சர் பாடம், சுவடி 73, 115, 36 5–18 கலந்த பொழுதுங் காட்சியு மன்ன. 18 –955–19 முதலெனப் படுவ தாயிரு வகைத்தே". I9

இவ்வியலின் 13 முதல் 19 வரையான ஏழு நூற்பாக்களின் வரிசை அமைப்பு பற்றி மு.அ.டபிள்ளையின் கருத்து 13ஆம் நூற்பாவின் அடிக்குறிப்பில் காட்டப்பெற்றது. பால கூறுவது வருமாது: "மாயோன் மேய என்னும் சூத்திரத்தான் முதற்பொருளுள் ஒரு கூறாகிய நிலத்தைக் கூறினார். கூறுமிடத்து அவை தினையாகிய ஒழுக்கத்தின் பெயரானும் வழங்கப்படுமென்பதை உணர்த்த முல்லை. குறிஞ்சி, மருதம், நெய்தலெனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே எனக்கூறி, அதனான் நிலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்திப் பின்னர் முதற்பொருளின் பிறிதொரு கூறாகிய காலம்பற்றிய இலக்கணத்தைத் தொடர்ந்து கூறி, அவை மயங்கியும் வரும் என்பதை உணர்த்த வேண்டித் திணைமயக் குறுதலும் கடிநிலையிலவே நிலனொருங்கு மயங்குத லில்லென மொழிப எனப்பின்னும் நிலத்தின் இலக்கணங் கூறினார். அதன்கண் கூறிய தினைமயக்குறுதல் என்பது உரிப்பொருள் பற்றிய இயல்பாதலின் அவ்வியைபு பற்றி உரிப்பொருள்கள் இவையென அவற்றைத் தொகுத்துக் கூறினார். அங்ங்ணம் கூறியதனான் நிலமும் பொழுதும் ஆகிய இரண்டொடு உரிப்பொருளும் கூடி முதற்பொருள் மூன்று கூறுபடுங்கொல்? என எழும் ஐயத்தைக் களைவான் வேண்டி முதற்பொருள் நிலமும் பொழுதும் என ஆயிரு வகைத்தே என இச்சூத்திரத்தான் வலியுறுத்துகின்றார் (பதிப்பு 84. பக். 48)