பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையியல் 199 றன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல் புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே. 53 பா.வே 1. பெறாஅத்தான் - சுவடி 106A 1001-54 ஏறிய மடற்றிற மிளமை தீர்திறந் தேறுத லொழிந்த காமத்து மிகுதிறன் மிக்க காமத்து மிடலொடு' தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. 54 1. பதிப்பு 2 இல் மடலொடு என இருப்பது அச்சுப்பிழை ஆகலாம். i I - ■ . . o 1002-55 முன்னைய நான்கு முன்னதற்" கென்ப. 55 1. முன்னய - சுவடி 502 எழுத்துப்பிழை னை>ன 2. முன்னைதற் - சுவடி 1066 எழுத்துப்பிழை ன>னை 1003-56 நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட் டாயிரு பாவினும்' உரிய தாகு மென்மனார் புலவர். 56 பா.வே 1. பாங்கினும் - நச்சர். பாடம்