பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi ஆன போதிலும், இசைநிலை நிறைய (1288). இயற்சீர்ப்பாற்படுத்து (1289) எனவரும் செய்யுளியற் சூத்திரங்களால் தனியசைகள் ஒரோவழிச் சீர்நிலை பெறுதல் கொள்ளப்படும் என்பது அறிதற்பாற்று. f நன்றியுரை இவ் வாய்வை எழுதி முடிக்குமாறு பணித்த பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகத்தின் இயக்குநர் முதுமுனைவர். வ.அய். சுப்பிரமணியம் அவர்கட்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இவ் வாய்விற்கு வேண்டற் பாலனவாய அடிப்படைக் கருவூலங்களாய் விளங்கும் பாடவேறுபாட்டுத் தொகுப்பு. பாடவேறுபாட்டு வகைகள், தொல்காப்பியப் பதிப்பு வரலாறு ஆகியவற்றை எழுதித் தட்டச்சுச் செய்து மேற்கொண்டு ஆய்வுரை எழுதுவதற்கேற்ப அமைத்துதவிய பேரா. முனைவர். ச.வே சுப்பிரமணியன் அவர்கட்கு மிகுந்த நன்றிக் கடப்பாடுடையேன். மேலும் இவ்வாய்வுக்கு உதவி வழங்கும் நூல்களாக திரு.மு. அருணாசலம் பிள்ளை, பேரா. ஆ.சிவலிங்கனார். பேரா. க.வெள்ளைவாரணனார் ஆகியோரின் தொல்காப்பிய உரைவளப் பதிப்புக்கள் அமைந்துளளன. திருமிகு அடிகளாசிரியர் அவர்களின் தொல்காப்பியப் பதிப்புக்கள் மூன்றும் இவ்வகையில் அமைந்தனவாம். தஞ்சை ச.பாலசுந்தரம் அவர்களின் காண்டிகையுரையும், அவற்றுள் இடம்பெற்றுள்ள அறிஞர். தி.வே. கோபாலய்யர் அவர்களின் ஆய்வு முன்னுரைகளும் பெரிதும் பயன்பட்டன. திரு. பி.சா. சுப்பிரமணிய சாத்திரியாரின் எழுத்து, சொல் குறிப்புக்களும் சில கருத்துக்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளன. முனைவர். வெ.பழனியப்பன் அவர்களின் தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் மிகவும் பயனுடையவாய் மிளர்கின்றன. ஆகவே மேற்கண்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும் உளம்கலந்த நன்றியைச் செலுத்திக் கொள்கிறேன். மேலும் இவ்வாய்வுரை எழுதுங்கால் பல ஐயங்கள் எழுந்தபோதெல்லாம் என் வேண்டுகோட் கிணங்கி, அஞ்சல்வழி ஐயங்களைப் போக்கிய அன்பர்கள் தி.வே. கோபாலய்யரும் தஞ்சை. ச.பாலசுந்தரமும் ஆவர். அவர்கட்கு என் அன்பான நன்றிகளை உரிமையாக்குகிறேன். இந்நிறுவன நூலகத்தில் இவ்வாய்வுக்குரிய பல திறந்தனவாகிய நூல்கள் உளவெனினும் மேலும் வேண்டிய நூல்களையும், பிற செய்திகளையும் சேகரித்து உதவிய என் மகனும், திருப்பனந்தாள் சாமிநாத சுவாமிகள் கலைக்கல்லூரி முதல் வருமாகிய கவிஞர். புலவர் ம.வே. பசுபதிக்கு என் வாழ்த்துக்கள். இவ்வாய்வு எழுதுங்கால் வேண்டும் வசதிகளையெல்லாம் அளித்துதவிய நூலகர், திரு. பாலச்சந்திரன் என் நன்றிக்கும் வாழ்த்துக்கும் உரியவர் ஆவார்.