பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EI Õ பொருளதிகாரம் நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணும்' அனைநிலை வகையோ டாங்கெழு வகையாற்’ றொகைநிலை பெற்ற தென்மனார் புலவர். 20 பா.வே. 1. பொருநர்க் கண்ணும் - சுவடி 115. ககரவொற்று மிகை. + -- 2. மனைநிலை - பதிப்பு 84 3. வகையிற் - நச்சர். சோம. பாடம். 1026-79 கூதிர் வேனி லென்றிரு பாசறைக் காதலி னொன்றிக் கண்ணிய வகையினும்' ஏரோர் களவழி யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையும் ஒன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும் பெரும்பகை தாங்கும் வேலி னானும் அரும்பகை தாங்கு மாற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையி னொன்றொடு புணர்த்துத்’ தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யானும் + அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (து. 77) என்னும் தத்திரத்துப் 'பாலறி மரபிற் பொருநர் கண்ணு மனைநிலை வகையொடு ஆங்கெழு வகையான் என்னுந் தொடரைக் கண்னும் மனைநிலை வகையொடு என்று பிரிக்காமல் அனைநிலை வகையொடு என்று பிரித்தனர். ஆங்கெழுவகை எனக் கூறப்பட்டுள்ளமை கண்டு அனைநிலைவகை என்பதனையே ஒரு வகையாகக் கூறிச்சென்றனர். அனைநிலைவகை என்பது மேற்கூறிய வகையினைச் சுட்டுவதன்றி அனைநிலை என்பதொரு வகையைச் கட்டாமையானும் மூதின் முல்லை. ஏறாண் முல்லை. இல்லாண் முல்லை எனப் பெண்பால் வாகை சான்றோர் இலக்கியங்களுள் பயின்று வருகின்றமையானும், அதனைக் கூறாவிடின் இவ்விலக்கணம் குன்றக்கூறலாய் முடியுமாதலானும் முன்னோர் பிறழப் பிரித்துள்ளமைக் கண்டு மனைநிலை வகை எனப் பிரித்துப் பாடங் கொண்டேன். இதன்கண் பிறழ்பிரிப்பு நேர்ந்தமை தவிர இப்பாடவேறுபாடு யாதுமில்லை". பால (த.நூ.பா.வே. பக் 77-78)