பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பொருளதிகாரம் 1027-80 காஞ்சி தானே பெருந்தினைப் புறனே. 24 இளம்பூரணர் இச்சூத்திரத்தையும் அடுத்ததையும் ஒரே நூற்பாவாகக் கொண்டுள்ளார். 1028-81 பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்' நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. 23 பா.வே. 1. பல்லாற் றானும் - நச்சர். சோம. பால. பாடம். 1029-82 மாற்றருங் கூற்றஞ்' சாற்றிய பெருமையுங் கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் பண்புற வருஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியு மறத்தி னானும் ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோற்’ பேஎ யோம்பிய பேஎய்ப் பக்கமும் இன்னனென் றிரங்கிய மன்னை யானும் இன்னது பிழைப்பி னிதுவா கியரெனத்' துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும் இன்னகை மனைவி பேஎய்" புண்ணோற்’ றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் நீத்த கணவற் றீர்த்த வேலிற் பெயர்த்த மனைவி ஆஞ்சி யானும் நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும் முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டான்" தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந் தாகு மென்ப பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசன் மயக்கத் தானுந் தாமே யெய்திய" தாங்கரும் பையுளுங் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்