பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் 217 1037-90 கொடிநிலை கந்தழி' வள்ளி யென்ற வடுநீங்கு' சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு’ கண்ணிய வருமே. 32 பா.வே. 1. வழி நீங்கு - சுவடி 1066 எழுத்துப்பிழை. டு >ழி 2. வாட்த்தொடு - சுவடி 1055 எழுத்துப்பிழை ழ்>ட் 103.8-91 கொற்ற வள்ளை யோரிடத் தான. 33 + சோம. கந்தழி என்ற பாடத்தைத் தாமே காந்தள் எனத் திருத்திக் கொண்டார். அவர் கூறுவதாவது "கந்தழி என்றொன்றை எத்திணைக்குந் துறையாகத் தொல்காப்பியர் கூறிலர் யாண்டுமவர் அதை விளக்கவுமில்லை. பழைய சான்றோர் செய்யுட்களிலும் இப்பெயருடைய புறுத்துறை எதுவும் பயிலாமையானும், இனைத்தென விளக்காதெதனையும் வாளா பெயரளவில் சுட்டி மயங்கவைப்பது தொல்காப்பிய ரியல்பன்றாதலானும் இதில் கந்தழி என்ற பாடம் பொருந்தாமை வெளிப்படை. நாளடைவில் பொருட்பொருத்தங் கருதாமல் ஏடு பெயர்த்தெழுதும் பரிசால் அது சிதைந்து கந்தழியாகி, பிறகதன் பொருத்த மாராயா துரைகாரர் தத்தமக்குத் தோற்றியவாறு பொருளுரைக்க அப்பாடமே நிலைத்தது போலும். இயற் பொருத்தம் தேராமல் கண்டாங்குக் கந்தழிப் பாடங் கொண்ட வுரைகாரரும். அவருரையால் மயங்கிய பிறரும் அதன் பொருளும் பொருத்தமும் தெளிந்து துணிய முடியாமல் தம்முள் மாறுபட்டு மறுகுவதொன்றே அப்பாடத் தியைபின்மையைத் தெளிப்பதாகும்." (பதிப்பு 51 பக். 308-309) "வள்ளி என்னுந் துறையினைப் போன்று அவையிரண்டும் முன்னர்க் கூறப்பட்டிருத்தல் வேண்டும் என்ற துணிவுடன் முன் கூறப்பட்ட குடிநிலையைக் கொடிநிலை எனவும். கந்தழியைக் காந்தள் எனவும் திருத்துதல் முன்னோர் கூறிவரும் உரை மரபுக்குப் பொருத்த முடையதாகத் தோன்றவில்லை." வெள்ளை. (பதிப்பு 51 பக். 313) "இனிப் பாரதியார் கொடிநிலை என்பதற்கு அரசர்க்குரிய சின்னமாகிய கொடி எனப் பொருள் கூறுவார். கந்தழி என்னும் பாடத்தைவிட்டுக் காந்தள் எனப் பாடங்கொண்டு காந்தள் கூத்துவகை என்பார். வள்ளியும் கூத்துவகை என்பார். இவை மூன்றும் கடவுள் வாழ்த்தொடு இணைத்துக் கூறப்படும் என்பது அவர் கருத்து. அங்ஙனம் இணைத்துக் கூறுமிடத்துப் பாடாண்டினைக்குரிய பரவலும் புகழ்ச்சியும் கடவுளுக்கு எய்துதலன்றி இவற்றிற்கு எய்தாமையான் இவை பாடாண்பகுதி என்னும் நூற் கருத்திற்கு முரணுதல் காணலாம். அவர் கருத்தின்படி இம்மூன்றும் வெட்சித்திணைக்குரிய துறைகளாகி அமரர்கண் முடியும் அறுவகையானும் என்னும் விதியுள் அடங்குமாதலின் அவர் கருத்துப் பொருந்தாமை தெளிவாகும்." பால. (பதிப்பு 84 பக். 259)