பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினையியல் - 2.19 சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும் நடைமிகுத் தேத்திய குடைநிழன் மரபும் மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமும் மன்னெயி லழித்த மண்ணுமங் கலமும் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும் பெருவள னேத்தி" நடைவயிற் றோன்றிய விருவகை' விடையும் அச்சமு முவகையு மெச்ச மின்றி நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமுங் காலங் கண்ணிய வோம்படை யுளப்பட" ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே. 35 பா.வே. 1. 3. தருக்கிய - சுவடி 34, 502, 1054 பொருந்தாப்பாடம். பிழை. யாற்றிடை - சுவடி 34. பிழை. ஆறு-வழி: யாறு - நதி. + = - - - - நாளனி - நச்சர் பாடம் நாள்வையிற் - சுவடி 9, எழுத்துப்பிழை. வ>வை 'நச்சர். சிறந்த நாளணி எனப்பாடங்கொண்டு உரை கூறுவார். இளம்பூரணர் பாடமே இத்துறைக் கருத்திற்குச் சிறந்திருத்தலை அறிந்து கொள்க' பால. (பதிப்பு 84 பக். 277) "பாடாண் திணையின் துறைகளை உணர்த்தும் தாவில் நல்லிசை (பொ. 88) எனத் தொடங்கும் நூற்பாவில் சிறந்த நாளினிற் செற்றம் நீக்கி என்பது இளம்பூரணர் கொண்ட பாடத்தொடர். இதற்குச் சிறந்த நாளனி செற்றம் நீக்கி என்ற பாடத்தை நச்சர். கொண்டார். பொருளுரைக்கும் இயல்பாலும், கொண்டு கூட்டு முறையாலும் அனைத்துக்கும் மேலாக இன்னோசையுடைமையாலும் இங்கும் சிறந்த நாளணிசெற்றம் நீக்கி என்ற நச்சர். பாடமே ஏற்கத் தக்கதாகும்." வெ.ப. (பக் 201-202)