பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பொருளதிகாரம் 1052-105 பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் அன்புற்று நகினு மவட்பெற்று மலியினும் ஆற்றிடை யுறுதலு மவ்வினைக் கியல்பே. I2 பா.வே. 1. ஆறிடை - சுவடி 1054. எழுத்துப்பிழை. றகரமெய் விடுபட்டது. 1053-105 பாங்கர் நிமித்தம்' பன்னிரண் டென்ப. 13 பா.வே. 1. பாங்கன் நிமித்தம் - நச்சர். பாடம். + பாங்கா நிமித்தம் - வெள்ளை. கொண்ட பாடம். பாங்கி னிமித்தம் - சுவடி 1. எழுத்துப்பிழை. க>கி டி வெள்ளைவாரணனார் உரையும் விளக்கமும் வருமாறு: அன்புற்றார் இருவர் துணையாய்க் கூடுவதற்கு நிமித்தமாவன பன்னிரண்டு என்பார் ஆசிரியர். அவையாவன:- காட்சி, ஐயம். துணிவு என இயற்கைப் புணர்ச்சிக்குமுன்னர்க் கூறிய மூன்றும். குறிப்பறிதலின் பயனாய்த் தோன்றும் வேட்கைமுதல் சாக்காடு ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பதுமாகும். இவை பன்னிரண்டுமே அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கிற் காமக்கூட்டத்திற்குக் காரணமாவனவாதலாற் பாங்கா நிமித்தம் எனப்பட்டன. பாங்கா நிமித்தம் என்பது பாங்கு ஆம் நிமித்தம் எனப்பிரியும். பாங்கு-துணை நிமித்தம் - காரணம். பாங்கா நிமித்தம் என்பதே ஏடெழுதுவோரால் பாங்கர் நிமித்தம் எனப் படிக்கப் பெற்றிருத்தல் வேண்டும். பாங்கர் நிமித்தம் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம்." (பதிப்பு 32 பக். 30) "வெள்ளைவாரணனார் காட்சி முதலாய மூன்றும். வேட்கை ஒருதலையுள்ளுதல் முதலாய ஒன்பதும் ஆகப் பன்னிரண்டும் என்றும் அவற்றையே இங்ங்னம் பகுத்துணர்த்தினார் என்றும் கூறுவார். பாங்கர் நிமித்தம் எனப் பாடங்கொள்ளாமல் பாங்கு அந்நிமித்தம் எனப்பாடமோதி அவ்வாறு உரைப்பார். அது பாடமாயின் பாங்கு என்பது வெற்றெனத் தொடுத்தலாகும். அகரச் சுட்டு இனிது பொருள் பயவாது கவர்க்கும் என்க." பால. (பதிப்பு 83 பக். 42) வெள்ளைவாரணனார் பாங்கு அந்நிமித்தம் எனப்பிரிக்கவில்லை. அவர் பிரிப்பு பாங்கு ஆ நிமித்தம் என்பதே. இதனை மிகத் தெளிவாக 'பாங்கு ஆம் நிமித்தம் எனப் பிரியும்' என எழுதுகிறார். இதில் அகரச்சுட்டே இடம் பெறுவதில்லை. மேலும் அவர் 'இவை பன்னிரண்டுமே அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டத்திற்குக் காரணமாவனவாதலால் பாங்கா நிமித்தம் எனப்பட்டன எனப் பாங்கா என்பதற்குப் பதப்ரயோஜனம் கூறுகிறார். இவ்விளக்கத்தின்படி பாங்கு என்பது வெற்றெனத்தொடுத்தலாகாமல் இன்றியமையாத சொல்லாகிறது. எனவே பால. அவர்களின் மறுப்பு மறு பரிசீலனைக் குரியது. ப.வெ.நா.