பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.35 பொருளதிகாரம் 4. தாளானெதிரும்’ - நச்சர். பாடம். 5. வரைவுடன் படுதலும் - நச்சர். பாடம் 6. புறத்துப் - நச்சர். பால. பாடம். 7. கிழவோண் - நச்சர். பால. பாடம். பதிப்பு 83இல் மூலபாடத்தில் தாளனெதிரும் (பக். 43) என உள்ளது. ஆனால் உரைப்பகுதியில் பால. "வாளான் எதிரும் பிரிவினானும் என்பது வாளாண்மை புரியும் பொருட்டுத் தலைவற்குப் பிரிவு நேர்ந்த விடத்தும்" என்றே எழுதுகிறார். இதனால் அவர் கொண்ட பாடம் வாளாண் என்பதே. மூலத்தில் உள்ளது அச்சுப்பிழையாகவே கருதத்தக்கது. இளம்பூரணர் இந்நூற்பாவில் கூறப்படுபவை களவில் தலைவனுக்குக் கூற்று நிகழும் இடங்கள் என்கிறார். ஆனால் நச்சரோ தலைவியின் கூற்றுகள் என்கிறார். இக்கொள்கைக்கேற்பவே முறையே கிழவோன். கிழவோள் என இருபாடங்கள் அமைந்தன. இதுபற்றி ஆய்வாளர்களின் கருத்துகள் வருமாறு: "களவியலுள். இருவகைக் குறிபிழைப்பாகிய இடத்தும். கிழவோன்மேன என்மனார் புலவர் (களவு - 17) என்ற சூத்திரம் தலைவனுக்குரிய கூற்றுக்களை உணர்த்துவதாய் இளம்பூரணர் கொண்டு. அதற்கு ஏற்ப விரிவுரை எழுதுகின்றார். ஆனால் நச்சர். அச்சூத்திரத்தின் இறுதி வரியில் உள்ள கிழவோன் என்ற சொல்லுக்குக் கிழவோள். என்று வேறு பாடங்கொண்டு தலைவிக்குரிய கூற்றுக்களை உணர்த்துவதாய் உரை எழுதுகின்றார். இளம்பூரணர் கொண்ட பாடமே பொருத்தமாய் உள்ளது. காமத்திணையில் என்று தொடங்கும் சூத்திரம் முதலாக, மறைந்தவற் காண்டல்' என்ற துத்திரம் ஈறாக (களவு 18-21) உள்ள நான்கு துத்திரங்களும் தலைமகளுக்கு உரியவையாய் உள்ளன. நானமும் மடமையும் கொண்ட தலைவி களவொழுக்கத்தில் உரையாடல் நிகழ்த்துமிடத்தை மிகமிக நுட்பமாய் அமைத்துக் காட்டுகின்றார் தொல்காப்பியர். ' காமத்திணையில்' (18) "காமஞ் சொல்லா (19) சொல்லெதிர் மொழிதல்' (20) என்ற மூன்று சூத்திரங்களும் தலைவி உரையாடுதற்கு உரிய அருமைப்பாட்டினைப் பலவாறு விளக்கிக் காட்டியபின்னர் மறைந்து அவற்காண்டல் (21) என்னும் நீண்ட சூத்திரத்தில் அவள் உரையாடல் நிகழ்த்தும் இடங்களைச் சுட்டுகின்றார். இவையாவும் பெண் உள்ளத்தின் இயல்பறிந்து அமைக்கப்பட்டவையாகும். ' இருவகைக் குறிபிழைப்பாகிய இடத்தும்' என்று தொடங்கும் சூத்திரம் தலைமகனுக்கு உரியது என்று இளம்பூரணர் கொண்டது பொருத்தமே. இச்சூத்திரத்தை நச்சர் கொண்டதுபோல, தலைவிக்குரியதாகக் கொண்டால், தலைவி களவொழுக்கத்தின்கண் நாணமும் மடமும் அச்சமும் இன்றி உரை நிகழ்த்திய நாகரிகக் குறைபாட்டிற்கு ஆளாவாள். களவொழுக்கத்தில் தலைவன் உரை நிகழ்த்தும் இடத்தை உணர்த்தும் துத்திரம் தொல்காப்பியர் செய்யவில்லை என்ற குறைபாடும் ஏற்படும். எனவே கிழவோன் என்று இளம்பூரணர் கொண்ட பாடமே சிறந்ததாகும்." மு.வை.அ. (உரையாசிரியர்கள் பக், 97-98)