பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 3.37 "இந் நூற்பாவில் தான் அகம்புகான் என்புழித் தலைவனையாகலானும், நானுநெஞ் சலைப்ப விடுத்தல்' என்புழி விடுத்தல் தொழிலாகலானும், வரைதல் வேண்டித் தோழி செப்புதல் தலைவனை நோக்கியாகலானும் கிழவோன் மேன என இளம்பூரணர் கொண்ட பாடமே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதென்பதும், கிழவோள்மேன என நச்சர் கொண்ட பாடம் அத்துணைப் பொருத்தமுடைய தன்றென்பதும் நன்கு புலனாகும். கிழவோன் கூற்று என்னாது கிழவோன் மேன எனப் பொதுப்படக் கூறினமையின் இவ்விடங்களில் தலைவனது உள்ள நிகழ்ச்சியும் கூற்றும் உடன் கொள்ளப்படும்." வெள்ளை (பதிப்பு 8.2 பக். 108) தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரையாசிரியராகிய பாலசுந்தரம் நச்சர், பாடத்தையே ஏற்று இந்நூற்பா "தலைமகள் கூற்று நிகழ்த்துமிடமும், அவள் நிகழ்த்து மாறும் பற்றிய கிளவிகள் இவை என்கின்றது" என்கிறார். (பதிப்பு 83 பக். 43) இக் கருத்துவேற்றுமைகளைப்பற்றித் தம் கருத்தைத் தெரிவிக்கும்படி வேண்டிக்கொண்ட போது தி.வே.கோ. கடிதத்தில் எழுதியதாவது: "தொல்காப்பியக் களவியலில் காமக்கூட்டம். காட்சி. ஐயம், துணிவு, குறிப்பறிதல், குறிப்பறிதலான் இருவர் உள்ளமும் ஒத்தவழியே களவிற்குரிய ஒழுகலாறுகள் நிகழும் எனல், தலைவன் இயல்பு. தலைவி இயல்பு. இருவரிடமும் பொதுவாகக் கிளர்ந்தெழும் உணர்ச்சிகள், இயற்கைப்புணர்ச்சி முதல் தோழியிற்புணர்ச்சியிறாக அமைந்த களவுக்கைகோளில் பெரும்பாலும் கூற்றுமொழியால் புலப்படுத்தும் பெருமையும் உரனுமுடைய தலைவன் தொடர்பாக அமையும் கூற்றுக்கள் நிகழும் இடங்களைத் தொகுத்துக்கூறல் என்ற முறையிலேயே முதல் பத்து நூற்பாக்கள் அமைந்துள்ளன. 11ஆம் நூற்பா மெய்தொட்டுப்பயிறல் == இயற்கைப்புணர்ச்சியையடுத்த இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம். தோழியிற்புணர்வு ஆகியவைபற்றித் தலைவன் கூற்று நிகழ்த்துமாறும், ஆற்றாமை மிக்கவழி அவன் மடன்மாக் கூறுதலும். 12ஆம் நூற்பா தோழியிற் புணர்வில் சிறப்புவகையால் நிகழும் கூற்றுக்கள் பற்றியனவும். 13-15ஆம் நூற்பா - (இருக்கின்ற உரைகளுக்குள் பாலசுந்தரனார் உரையே ஒரளவு ஏற்றற்குரியது) மெய்தொட்டுப் பயிறல் என்ற நூற்பாவில் பாங்கன் தோழி நிமித்தமான பன்னிரண்டு கிளவிகளும். கைக்கிளை, பெருந்தினை, ஐந்தினை ஒழுக்கமாக அமையுமாறு விளக்கப்பட்டுள்ளது. இனி தலைவி கூற்றுக் குறிப்பிடப்படும். 17ஆம் நூற்பா தலைமகள் கூற்று நிகழ்த்துமிடமும், நிகழ்த்துமாறும் பற்றிய கிளவிகள். 18-20ஆம் நூற்பா- தலைவிக்குரிய சிறப்பியல்புகளும் தலைவி நேர்க்கூற்றுக் கூறாமைக் காரணமும், 21ஆம் நூற்பா ஒரோவழித் தலைவி தன்வயின் உரிமையும் தலைவன்வயின் பரத்தமையும் தோன்றப் பெரும்பாலும் தோழியிடம் கூறுவன.