பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EoP பொருளதிகாரம் 22, 23ஆம் நூற்பா பிறவாறு வரும் தலைவி கூற்றுக்கள். 24ஆம் நூற்பா- தோழி கூற்றுக்கள் 25ஆம் நூற்பா- செவிலி கூற்றுக்கள் 17ஆம் நூற்பா உரையில் இளம்பூரணர், "கிழவோன் கூற்று என்னாது கிழவோன்மேன என்றதனால் கூற்றேயன்றி உள்ள நிகழ்ச்சிகளும் கொள்க' என்றார். ஒன்றித்தோன்றுந்தோழிமேன (அகத். 42), கிழவோள் மேன (அகத். 44), தோழி மேன (களவு 24). செவிலி மேன (களவு. 25) எனத் தொல்காப்பியர் கூறுகிறாரேயன்றித் தோழி கூற்று. கிழவோள் கூற்று. தலைவன் கூற்று என்பன போலக் கூறுவதேயில்லை. மேன என்பதே ஆசிரியர் வழக்கம். அவ்வாறாக நேரிடையாகத் தலைவன் கூற்றாக எடுத்துக்காட்டு எதுவும் கிட்டாமையின் உள்ள நிகழ்ச்சிகளும் கொள்க' என்றார். இளம்பூரணர். இந்நூற்பாவைத் தலைவி கூற்றாகக் கொள்வதற்கே பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. மடன்மாக்கூறும் எனவே தலைவன் கூற்று என்பது பெறப்பட்டு விட்டது. தோழிமேன. செவிலிமேன என்றாற்போலக் கிழவோள்மென என்ற நூற்பாவும் வேண்டும். இந்நூற்பாச் செய்திகள் தலைவன் கூற்றினும் தலைவி கூற்றுக்கே மிகுதியும் வாய்ப்புடையனவாதல் உதாரணங்களால் உணரப்படும். வெள்ளைவாரணனார் ஆய்வுரையில் தான் தலைமகனது இல்லத்திற்குள். காலத்தினும்' எனற தொடர் பொருளொடு புணர்ந்த தொடரா என்பதனை நோக்க வேண்டும். தான் அகம் புகான் - தான் - தலைவன். விடுத்தல் - தொழில், வரைதல் வேண்டித் தோழி செப்புதல் தலைவனை நோக்கி, எனவே கிழவோன் என்றே பாடம் என்றார். இதுபோலப் பலவற்றிற்கும் கூறலாம். உதாரணமாக "தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்" (களவு 11 13-14): தோழி - எழுவாய். குறையவட் சார்த்தி - தொழில், மெய்யுறக்கூறுதல் - தலைவனை நோக்கி. எனவே இந்நூற்பா தோழி கூற்றா? 17ஆம் நூற்பாவைத் தலைவன் கூற்றாகக் கொள்வதால் எடுத்துக்காட்டுக்கள் அருகியே உள்ளன. தலைவி கூற்றாயின் பல உள. தலைவன் கூற்று 11ஆம் நூற்பாவில் கூறப்பட்டுப் புறனடையும் கூறப்பட்டுவிட்டது. தோழிமேன. செவிலிமேன என்றாற் போலக் கிழவோள்மேன என்ற நூற்பாவும் வேண்டும். அடுத்த 21ஆம் நூற்பா ஒரு சார் இயல்பு பற்றியது. எனவே 17ஆம் நூற்பாவில் கிழவோள்மேன என்பதே பாடம். தலைவியைச் சார்ந்தன என்ற கருத்தை மறுக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் சிறிதும் வலிமையற்றவை. தொல்காப்பியம் கிளவிகள் 'இன்னாரால் இன்னாருக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லப்பட்டது. இது என்ற விளக்கம் இன்றிச் செய்தி மட்டும் கூறுமாதலின் தெளிவின்மை ஏற்படுகிறது. "தானகம் புகாஅன்.பொழுதினும்' என்னும் பகுதிக்கு நச்சரின் உரைவிளக்கம், எடுத்துக்காட்டு இவற்றையும் உரையாசிரிப்ரின் விளக்கம், எடுத்துக்காட்டு இவற்றையும் நோக்கியே இது கிழவோள்மேன என்பதை உறுதிப்படுத்தலாம். ' தானகம் புகாஅன் பெயர்தலின்மையின் என்பதற்கு இளம்பூரணர் உரையே எழுதவில்லை." தி.வே.கோ. கடிதம.