பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 1058–111 பா.வே. காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் நாணு மடனும் பெண்மைய வாகலிற்’ குறிப்பினு மிடத்தினு மல்லது வேட்கை நெறிப்பட வாரா வவள்வயி னான. 1. வாதலிற் - நச்சர். பாடம். 1059–112 I060–113 பா.வே. 1. கூற்றும் மொழி - சுவடி 73. எழுத்துப்பிழை. மகரமெய் மிகை. காமஞ் சொல்லா நாட்ட மின்மையின் ஏமுற விரண்டு முளவென மொழிப. சொல்லெதிர் மொழித லருமைத் தாகலின் அல்ல கூற்றுமொழி1 யவள்வயி னான. 106.1-114 மறைந்தவற் காண்ட றற்காட் டுறுதல் நிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல் வழிபாடு மறுத்தன் மறுத்தெதிர் கோடல் பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் கைப்பட்டுக் கலங்கினு நானுமிக வரினும் இட்டுப்பிரி விரங்கினு மருமைசெய் தயர்ப்பினும் வந்தவழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும் நொந்துதெளி வொழிப்பினு மச்ச நீடினும் பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும் வருந்தொழிற் கருமை வாயில் கூறினுங் கூறிய வாயில் கொள்ளாக் காலையும் மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற வருமறை யுயிர்த்தலும் உயிராக் காலத் துயிர்த்தலு முயிர்செல 239 18 19 20