பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£30 பா.வே. பொருளதிகாரம் வேற்றுவரைவு வரினது மாற்றுதற்’ கண்ணும் நெறிப்படு’ நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி(ய்) ஒருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோள் அருமை சான்ற நாலிரண்டு வகையிற் பெருமை சான்ற வியல்பின் கண்ணும் பொய்தலை யடுத்த மடலின் கண்ணுங் கையறு தோழி கண்ணிர் துடைப்பினும் வெறியாட் டிடத்து வெருவின் கண்ணுங் குறியி னொப்புமை மருடற் கண்ணும் வரைவுதலை வரினுங் களவறி வுறினுந் தமர்தற் காத்த காரண மருங்கினுந் தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தவன் பெயர்ந்த வறுங்கள நோக்கித் தன்பிழைப் பாகத் தழிஇத் தேறலும் வழுவின்று நிலைஇய வியற்படு' பொருளினும் பொழுது மாறும் புரைவ தன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணுங் காமஞ் சிறப்பினு மவனளி சிறப்பினும் ஏமஞ் சார்ந்த வுவகைக் கண்ணுந் தன்வயி னுரிமையு மவன்வயின் பரத்தையும் அன்னவு முளவே" யோரிடத் தான. 1. தெளியொழிப்பினு - சுவடி 1, 16 எழுத்துப்பிழை. வ>ய - 2. மாற்றற் - சுவடி 53. சுவடி எழுத்தாளர் சொந்தப்பாடம் போலும், மாற்றம் இல்லை. எனினும் மூலபாடமன்று. 3. நெறிபடு - நச்சர். பாடம். 21 பொருள்