பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.38 பொருளதிகாரம் "இந்நூற்பா களவொழுக்கம் ஒழுகும் தலைவனுக்குரிய திறன் உணர்த்துவதாகக் கொண்டு. மேற்கூறியவாறு மூவகையுணர்வால் தோழி மதியுடம்படுத்த பின்னன்றித் தலைமகன் தன் குறை முடித்தல் வேண்டும் எனத் தோழிக்கு வெளிப்படக்கூறி இரந்து பன்னிற்கும் முயற்சியை மேற்கொள்ளப் பெறுவானல்லன் எனவும் தலைவியொடு தனக்குள்ள அன்டரின் திறத்தையுணர்ந்து தோழி 56Tæಥ್ರ வழிபடும் குறிப்பினளாதலையுணர்ந்த பின்னரே தன் குறையினைத் தோழிக்குச் சொல்லால் வெளியிட்டுரைத்தற்குரியன் எனவும் விளக்கிய திறம் உளங்கொளத்தகுவதாகும்." வெள்ளை. (பதிப்பு 32 பக். 250 அடிக்) "இனி பின்னிலை முயற்சிபெறான் எனப்பாடங்கொண்டு குறையுறவுணர்தல் முதலாக மூவகையுணர்வால் தலைமகளொடு தனக்குள்ள அன்புரிமைத் தொடர்பினைத் தோழி உணர்ந்து வேண்டித் தோழியை இரந்து பின்னிற்கும் முயற்சியை மேற்கொள்ளப் பெறான் எனப்பொருள் வரைந்து, தலைவனது மறை பிறரறியா நிறையுடைமையைப் புலப்படுத்தியதாகக் கொள்ளுதலும் பொருந்தும்." வெள்ளை (பதிப்பு 32 பக் 231) வெள்ளைவாரணனார் நச்சர். இளம்பூரணர் ஆகிய இருவர் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கிறார். பால. இளம்பூரணரையொட்டி உரை கூறுகிறார். "இந் நூற்பாவுக்கு முன்னும் பின்னும் அதற்கேற்ப உரைப்பதற்குத் தோழியைப் பற்றிச் செய்தி உளதாகலின் இளம்பூரணர் கொண்ட பாடமும் உரையுமே சிறப்புடைத்தாம்." சுந்தர. (பதிப்பு 74 பக். 228) இவ்வியல் 35ஆம் நூற்பாமுதல் தோழியைப் பற்றிய செய்திகள் வருகின்றன. இவை கூற்றுக்களைக் கூறும் நூற்பாக்கள் அன்று. நிகழ்ச்சிகளை விளக்கும் தத்திரங்கள் ஆகும்35. 36ஆம் நூற்பாக்களில் தோழியாவாள் செவிலியின் மகள் என்றும். அவள் சூழவும். உசாத்துணையாகவும் வல்லவள் என்றும் கூறுகிறார். 37ஆம் நூற்பா அத்தோழி தலைமக்களின் அன்புடைமையை எவ்வாறு அறிந்து கொள்வாள் எனக்கூறுகிறது. (மதியுடம்படுதல்) இவ்வாறு தெளிவாக அறிந்துகொண்ட பின்னரே தோழி தலைமக்களின் காதலுக்கு உதவி செய்வாள் என்பது 37ஆம் நூற்பாவிற்கு இளம்பூரணர் கூறும் கருத்து. தங்கள் காதலைத் தோழி ஐயமற உணர்ந்து, தான் உதவி செய்ய முடிவு செய்து விட்டாள் எனத் தனக்கு உறுதி ஏற்படாதவரைத் தலைவன் தோழியிடம் நேராக உதவி கோரமாட்டான் என்பது இந்நூற்பாவிற்கு நச்சர் கூறும் கருத்து. (இதில் உணர்ந்து முடிவு எடுக்கும் தலைமை அல்லது முதன்மைப் பொறுப்பு தோழியுடையதே என்பது வெளிப்படை) முயற்சிக் காலத்து (39) என்னும் அடுத்த நூற்பாவை இளம்பூரணர் தோழிக்குரியதோர் திறம் உணர்த்துகின்றதாகக் கொண்டு. "தோழி வழிமொழிந்து முயலுங்காலத்து அவன் நினைவின் கட்படுத்திறன் ஆராய்ந்து புணர்த்தலைச் செய்யும் அவளிடத்து' என உரை வரைகிறார். நச்சர். தலைவன் முயற்சி கூறிய முறையே தோழி முயறசி பிறக்குமிடங் கூறுவதாகக் கொண்டு. "தலைவன் அங்ங்னங் கூடுதற்கு முயற்சி நிகழ்த்துங்காலத்தே தலைவி கூடுதற்கு முயலுங் கருத்தினை ஆராய்ந்து அக்கூட்டத்திடத்தே உள்ளம் படும்படிக் கூட்டுதலும் தோழியிடத்து உண்டான கடைப்படி" எனப் பொருள். உரைக்கிறார். /தொடங்சி அதிதச பக்கத்