பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 2,39 107.9-132 முயற்சிக் காலத் ததற்பட நாடிப் புணர்த்த லாற்றலு:3 மவள்வயி னான. 39 பா.வே. 1. ததர்ப்பட - பால. திருத்திக்கொண்ட பாடம். சுவடிச்சான்றில்லை. நெறிமுறை ஆராய்ந்து எனப் பொருளுரைக்கிறார். 2. திரப்பட்நாடிடிற் - சுவடி 73. சுவடி எழுத்தாளரின் சொந்தப்பாடம் நினைவுப்பாடம் ஆகலாம்; மூலபாடமன்று. 3. ஆற்றல் - சுவடி 115 பிழை, உம்மை வேண்டும். 1080-133 குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியக் கிளந்த வாற்ற' தென்ப. 40 பா.வே. 1. அறியத் தோன்று மாற்ற - நச்சர். பாடம் பதிப்பு 74 பக். 229இல் அறியக்கிடந்த என்பது அடிக்குறிப்பு. இது அச்சுப்பிழை. அறியக் கிளந்த என்பதே இளம்பூரணர் பாடம். என்னை? அறியச் சொல்லப்பட்ட என்பதே அவர் உரையாதலின். 1081-134 இரவுக் குறியே இல்லகத் துள்ளும் மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் ചുക.wീiഞ് LTIT5ĦĦ. 41 பா.வே. 1. இரவிற் குறியே - பதிப்பு 24 அச்சுப்பிழையாகலாம். 2. மனையோள் - பதிப்பு 24இல் சு.வே. பொருந்தாப்பாடம். தான் நேரடியாகக் கேட்காமலேயே தோழி தங்கள் காதலை அறிந்து கொண்டு விட்டாள் எனவும். அவள் தங்களுக்கு உதவி செய்வாள் எனவும் உறுதியாகத் தெரிந்து கொண்ட பிறகே தலைவன் தோழியின்பால் உதவி வேண்டுவான் என நிகழ்ச்சி அமைப்பு இருப்பின் தோழியின் திறத்திற்கும். தலைவனின் தலைமைக்கும் சிறப்பாகும். இப்பொருள் தொடர்ச்சிக்கு 37ஆம் நூற்பாவில் குறையற எனவும். 38ஆம் நூற்பாவில் பெறான் எனவும் பாடங்கொள்ளல் சிறப்புடையதாகும். இவற்றிலெல்லாம் தோழியின் உணர்வும், உதவியுமே மையப்பொருளாக அமைந்திருத்தலான் அதிகாரப் பிறழ்வு ஒன்றும் இல்லை என்பது வெளிப்படை. ப.வெ.நா.