பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 243 அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட வொழுகலும் அழிய ல்ஞ்சலென் றாயிரு பொருளினுந் தானவட் பிழைத்த பருவத் தானும் நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னி னாகிய தகுதிக் கண்ணும் புதல்வற் பயந்த புனிறுதி பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோ னோக்கி(ய்) ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ்" செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் பயங்கெழு துணையணைப்' புல்லிப்' புல்லாது) உயங்குவள்' கிடந்த கிழத்தியைக் குறுகி(ய்) அல்கன்' முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய விரவினும் உறலருங்' குரைமையி" லூடன்மிகுத் தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் Ι7 பிரிவினெச் சத்துப் புலம்பிய விருவரைப் பரிவு நீக்கிய" பகுதிக் கண்ணும் நின்றுநணி பிரிவி னஞ்சிய பையுளுஞ் சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியுங் காமத்தின் வலியுங் கைவிடி னச்சமுந் தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் உடன்சேறற் செய்கையொ டன்னவை" பிறவும் மடம்பட வந்த தோழிக் கண்ணும்" வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும் மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் பேரிசை யூர்திப் பாகர்’ பாங்கினுங்’ காமக் கிழத்தி மனையோ ளென்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய வெதிருஞ்