பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.48 பொருளதிகாரம் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவ தென்ப. G பா.வே. 1. நீங்கிய - பதிப்பு 83இல் மூலம் இவ்வாறு இருப்பினும் உரையில் நீக்கிய - விலக்கிய எனச்சரியாக உள்ளது. எனவே இது அச்சுப்பிழை. 2. தயங்கிய - சுவடி 1054. பிழை. முதல் யகரம் மிகை. 3. கிழத்தியர் - சுவடி 73. பிழை. ஒருமைப்பாடமே பொருந்தும். 4. யுள்ளமொடு - நச்சர் பாடம். 5. நெருங்கலும் - நச்சர். பால, பாடம். 6. பகுதி - சுவடி 115. பிழை, இன் உருபு விடுபட்டது. 7. வையிற் - சுவடி 7. சரிடங்களிலும் பிழை. வயின் என்பதே பாடம். 8. சிறைப்பினு - நச்சர். பாடம் 9. கிழத்தியா - நச்சர். பால, பாடம் 10. தீய்மையின் - சுவடி 9. பிழை. யகர மெய் மிகை. 11. யொழுக்கந் - நச்சர். பாடம். 1093-151 புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந்(து) இடச்சுரத் திறைச்சியும் வினையுஞ் சுட்டி(ய்) டி காமக்கிழத்தி என ஒருமையிற் பாடங் கொண்ட இளம்பூரணர், காமக்கிழத்தியின் நலத்தினைப் பாராட்டிய எனப்பொருள் கூறி. 'நின்கேளே. வினவுவோளே." (ஐங்குறு. 122) "நின்நெஞ்சு நேர்பவளே" (குறுந. 49) என ஒருமையிலேயே மேற்கோள் காட்டுகிறார். காமக்கிழத்தியர் என்று பன்மைப் பாடங்கொண்ட நச்சர் நலம் பாராட்டிய காமக்கிழத்தியர் எனப் பொருள் உரைத்து. "பலர்நீ ஒதி ஒண்ணுதல் பசப்பித் தோரே." (ஐங்குறு. 87) எனப்பன்மையிலேயே மேற்கோள் காட்டுகிறார். எனினும் அவர் "அணிற்பல்லன்ன" (குறுந் 19) என்னும் பாட்டுக் கற்பாகலின் இதன்பாற்படும்" என்று கூறுவதால் ஒருமை இலக்கிய ஆட்சியையும் ஏற்றுக் கொள்கிறார். நச்சரைப்போலப் பன்மைப் பாடங்கொண்ட பால. கலித். 88ஆம் பாடலைக் காட்டுகிறார். இது பன்மைக்கே மேற்கோள். இலக்கியத்தில் காமக்கிழத்தி. காமக்கிழத்தியர் என இருவகைப் பட்ட ஆட்சியும் இருப்பதால் இரண்டு பாடங்களும் ஏற்கத்தக்கனவே. ப.வெ.நா.