பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 5 ) பொருளதிகாரம் எளிமைக்' காலத் திரக்கத் தானும் பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும் நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்' காத்த தன்வயிற்' கண்ணின்று பெயர்ப்பினும் பிரியுங் காலத் தெதிர்நின்று' சாற்றிய மரபுடை யெதிரு' முளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந் - தோழிக் குரிய வென்மனார் புலவர். 5. பா.வே. 1. கிழவோட்' - நச்சர். பாடம், இவர் இளம்பூரணர் கொண்ட கிழவோற் என்னும் பாடத்தைச் சுட்டித் தழுவிக் கொள்கிறார். + 'நச்சர். 'பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் (தோழி) தலைவற்குக் கூறும் என்பார். அங்ங்ணம் தோழி தலைமை செய்தொழுகுதல் கற்பின்கண் மரபன்மையின் ஒவ்வுமாறில்லை. அதனான் கிழவோட் சுட்டிய என்னும் பாடம் சிறவாதென்க' பாலி பதிப்பு 8.3பக் 154) "திருமணம் நிகழ உதவிய தெய்வத்துக்குப் பரவுக்கடன் கொடுக்குமாறு தலைவனிடம் தோழி வேண்டியமை தன்னலம் ஏதும் சிவனாத வகையில் அவர்கள் நன்மையையே கருதிக் கூறலின் தலைவனால் ஏற்றுக்கொள்ளத் தக்கதேயன்றித் தோழி தலைமை செய்தொழுகினனாகக் கருதப்படாது." தி.வே.கோ. (மேலது. பக் XIX) இளம்பூரணர். நச்சர். இருவரும் இங்கு "நெஞ்சமொடு மொழிகடுத்...... மற்றதன் பயனே" என்னும் ஐந்தடி அகவற்பாவையே மேற்கோளாகக் காட்டுகின்றனர். இப்பாட்டு எந்த நூலைச் சேர்ந்தது என விளங்கவில்லை. தோழி கூற்று என்பது உறுதி. கேட்போர் யார் என்பதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர் என ஊகிக்க முடிகிறது. இளம்பூரணர் தோழி தனக்குட் சொல்லிக் கொள்வதாகக் கருதுகிறார் எனலாம். ஆனால் நச்சர். இதனைக் களவொழுக்கம் முடிந்து கற்பொழுக்கத்தில் புகுந்த தலைவன்பால் தோழி கூறுவதாகக் கொண்டுள்ளார் எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. "தெய்வத்துக் குன்றம் இறைஞ்சினம், யாம் அதன் பயன் பெற்றனம்" என்னும் தன்மைப் பன்மை தலைவியையும் சேர்த்ததாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு கூறுவதனாலேயே நேர்த்திக் கடன் செலுத்த வேண்டும் என்பதனைப் பொருளெச்சமாகக் கொள்வது இலக்கிய மரபு. இம்முறையில் நச்சரின் பாடமும் உரையும் ஏற்கத் தக்கதே. தலைவனுக்கே தோழி வாயில் மறுக்குமளவு கற்பின்கண்ணும் தலைமை இருப்பனக் இலக்கியங்களில் காண்கிறோம். ப.வெ.நா.