பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 O பொருளதிகாரம் كانت 1141–194 யாறுங்’ குளனுங் காவு மாடிப் பதியிகந்து நுகர்தலு முரிய வென்ப, 50 பா.வே. 1. ஆறுங் - சுவடி 73. பிற்காலத்தைய வழக்கு பொருந்தாது. II.42–195 "காமஞ் சான்ற கடைக்கோட் காலை(ய்) ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி(ய்) அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே. 5.I 1143-196 தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி' யிளையர் விருந்தினர் கூத்தர் விறலிய ரவறிவர் கண்டோர்’ யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப. 52 பா.வே. 1. பாட்டி - இளம்பூரணர் பாடம். 2. விருந்தினர் - பதிப்பு 24இல் இரண்டாமடியின் ஈற்றுச்சீரும் மூன்றாமடியின் இறுதிச்சீரும் விருந்தினர் எனவே உள்ளது. (பக். 282) மூன்றாவதடியில் அச்சுப்பிழையாகலாம். சுந்தர. இந்நூற்பா இவ்வியலின் கடைசிச் சூத்திரமாக அமைந்திருந்தால் பொருத்தமாம் எனக் கருதுகிறார். (பதிப்பு 74 பக். 414) இன்ப விழைவுகளைத் துய்த்துக் கழிந்த பின்னர் இது நிகழ்வதாகலின் இக்கருத்து ஏற்புடையதே. நச்சர். அடுத்த நூற்பாவைத் துறவிற்கு உரியவரான வாயில்களைக் கூறுவதாகக் கொள்கிறார். பாணன், பாடினி, கூத்தர் விறலியர் ஆகியோர் துறவிற்குத் துணை நிற்பர் என்பது பொருந்தாது. மேலும் உலகியல் இன்பங்களைத் துய்த்து முடித்தபின் இயல்பாக வட்டின்ப நாட்டம் ஏற்பட்டுத் தலைவனும் தலைவியுந் தாமே ட் பறர் தலையீடின்றி - சிறந்தது பயிற்றலே இந்த நூற்பாவின் நுதலிய பொருள். எனவே நச்சரின் விளக்கம் ஏற்புடையதல்ல. இளம்பூரணர். வெள்ளைவாரணனார். பாலசுந்தரனார் மூவரும் இதுபற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் அவர்களுடைய D_CAN)лт இவ்வாயில்கள் மனையறத்திற்குரியவர்களே என்று உறுதி செய்கிறது. இந்நிலையில் துறவறத்திற்கு வாயில்கள் அல்லர் என்பது பெறப்படுவதால் சுந்தரமூர்த்தியின் கருத்துப்படிக் காமஞசான்ற என்னும் இந்நூற்பாவைக் கற்பியலின் இறுதி நூற்பாவாகக் கோடலே சிறப்புடையதாகும். ப.வெ.நா.