பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் o EE 1 1144–197 "வினை.வயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை(ய்) இடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை(ய்) உள்ளம் போல வுற்றுழி யுதவும் புள்ளியற் கலிமா வுடைமை யான. 5.3 கற்பியல் முற்றும். + நச்சர். இந்நூற்பாவின் சிறப்புரையில், "இதனை மீட்சிக்கு எல்லை கூறிய தத்திரங்களின்பின் வையாது சண்டுத் துறவு கூறியதன் பின்னர் வைத்தார். இன்பதுகர்ச்சி இன்றியிருந்து அதன்மேல் இன்பம் எய்துகின்ற நிலையாமை நோக்கியும் மேலும் இன்பப் பகுதியாகிய பொருள்கூறுகின்றதற்கு அதிகாரப்படுத்துதற்கும் என்று உணர்க' எனக் கூறுகிறார். ஒர் இன்ப நுகர்ச்சி இடையிடுபட்டு மீண்டும் கிடைக்கும் என்னும் துணிவு இருக்குமாயின் அது நிலையாமை பற்றிய கருத்தைத் தோற்றுவிக்காது. ஒருமுறை இழந்துவிட்டால் மீண்டும் எந்த நிலையிலும் திரும்பப் பெற இயலாத நிலையே நிலையாமை உணர்வினைத் தோற்றுவிக்கும். இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை இத்தகையன. இதனாலும் இவ்வியலின் 51, 52ஆம் நூற்பாக்கள் துறவுக்குரியனவாகா என முன்பே காட்டப்பட்டுள்ளதாலும் நச்சரின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கில்லை. ப.வெ.நா.