பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் 255 1156-209. எளித்த லேத்தல் வேட்கை யுரைத்தல் கூறுத லுசாஅத லேதிடு தலைப்பாடு) உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇயல்’ ஏழு' வகைய வென்மனார் புலவர். I2 பா.வே. 1. லு:சாத - நச்சர். பால. பாடம் 2. தொகைஇ - நச்சர். பால. பாடம். 3. அவ்வெழு - நச்சர். பால. பாடம். 1157-210 உற்றுழி யல்லது சொல்ல லின்மையின் அப்பொருள் வேட்கைக் கிழவியி' னுணர்ப. 13 பா.வே. 1. கிளவியி - சில இளம்பூரணப் பதிப்புகளில் பாடம் இவ்வாறு இருப்பினும் உரை, தலைமகள் தன்னானே' (தலைவியின் குறிப்புக்களால்) எனவே இருப்பதால் மூலத்தில் அச்சுப்பிழையாகக் கொள்ளல் தகும். அவள்வயின் வேட்டல் எனப் பாடங்கொண்ட இளம்பூரணர் தலைமகள்மாட்டுப் பனர்ச்சி வேட்கை தோன்றியவழி எனப் பொருள் கூறுவர். நச்சர் கூறும் பொருளைவிட இளம்பூரணர் உரை இங்குச் சிறந்துள்ளது. அவள்வயின் என்ற பாடத்தை ஏற்புடையதாகக் கொள்ளலாம். வெ.ப. (பக். 207) இந்நூற்பாவில் மடனழியும் இடங்களாக இருநிலைகள் கூறப்படுகின்றன. முதலாவது தலைவன் தன் புறத்தொழுக்கத்தைத் தலைவியிடம் மறைத்தல். இதில் ஆய்வாளர்கட்குக் கருத்து வேற்றுமை இல்லை. இரண்டாவது அவள்வயினா. அவன்வயினா என்பதில் வேறுபாடு. இருவருக்கும் காதல் தலைவிக்குத்தான் என்னும் பொருளிலும் ஒற்றுமையே. ஆனால் பாடத்தில் மாறுபடுகின்றனர். அவள்வயின் வேட்டல் எனப் பாடங்கொண்ட இளம்பூரணர் நேராகத் தலைவிக்குப் புனர்ச்சி வேட்கை உண்டாக என எழுதுகிறார். இங்கு அவள்வயின் என்பதற்குத் தலைவியிடம் எனப்பொருள். கற்புடைய தலைவிக்கு விருப்பம் யார் மீது உண்டாகும்? தலைவன் மீது தானே? இதனைப் பாடமாகக் கொண்டார் நச்சர் தலைவி அவன்வயின் வேட்டலும் என்பதற்குக் கிழத்தி தலைவனை விரும்புதலும் எனப்பொருள் காண்க. அவன்வயின் - அவன் மீது. தலைவிக்குக் காதல் (இளம்பூரணம்), தலைவன்மீது காதல் (நச்சினார்க்கினியம்); இரண்டும் ஒன்றே. இருவரும் சரியான பாடங்களைக் கொண்டு. தெளிவாக உரை கடறியுள்ளனர். பாலசுந்தரனார் நச்சரைப் பின்பற்றியுள்ளார். இப்பாடங்களில் தலைவியின் செயல் அதிகாரப்பட்டு வருவதிலும் எந்தக் குறையும் இல்லை. ப.வெ.நா.