பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பொருளதிகாரம் 1158-211 செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பும் அறிவு மருமையும் பெண்பா லான. 14 1159-212 பொழுது மாறுங் காப்புமென் றிவற்றின் வழுவி னாகிய குற்றங் காட்டலுந் தன்னை யழிதலு' மவனு' றஞ்சலும் இரவினும் பகலினும் நீவா வென்றலுங்’ கிழவோன் றன்னை வார லென்றலும் நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த வன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள வென்ப. I of பா.வே. 1. 2, o யழித்தலு - பதிப்பு 2 பிழை; யறிதலு - பதிப்பு 24 இல் சு.வே. மவணு - பதிப்பு 24 நீவர லென்றலுங் - நச்சர். பாடம். நிறையும் என்பதுதான் நச்சர் கொண்ட பாடம். ஆனால் எல்லாப் பதிப்புகளிலும் இளம்பூரணர் பாடமாகிய நிறைவும் என்பதே மூலபாடமாக உள்ளது. இதுபற்றி வெள்ளைவாரணனார் கூறியுள்ள கருத்து சிறப்புடையது. அது வருமாறு:'மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளமும் என வரும் உரைப்பகுதி கொண்டு இச்சூத்திரத்தில் நிறை என்பதே நச்சர். கொண்ட பாடம் என்பது நன்கு தெளியப்படும். 'நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை (கலித். 133) எனவரும் கலித்தொகைத் தொடரும் இங்குக் கருதத் தகுவதாகும். இளம்பூரணர் நிறைவு எனப் பாடங்கொண்டு அமைதி எனப் பொருள் வரைந்துள்ளமையும் இங்கு எண்ணத் தகுவதாகும்." (பதிப்பு. 64 பக். 51) பால நிறைவும் என மூலபாடங்கொண்டு. 'மறை புலப்படாவாறொழுகும் நிறைவும் எனப் பொருள் கூறுகிறார். நிறைவு என்னும் சொல் நிறை எனப் பொருள் தருமா என்பது மேலாய்வுக்குரியது. ப.வெ.நா. அவனு றஞ்சலும் என்பது வ.உ.சி. பதிப்புப் (24) பாடம். இதற்கு அவண் - அந்த இராப்பொழுதில், அந்தக் கொடியவழியில். அந்தக் காவலில் எனப் பொருள் கொள்ளலாமாயினும் இளம்பூரணர் உரை இவ்வாறு இல்லை. அவர். "தலைமகற்கு வரும் இடையூறு கூறலும்" என்றே பொருள் கூறுகிறார். இதனால் அவர் கொண்ட பாடம் அவன் ஊறு என்பதேயாகும். இதுவரையில் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு ஒரே ஒரு சுவடிதான் கிடைத்துள்ளது என்பது நினைவிலிறுத்த வேண்டிய செய்தி. அச்சுவடியில் பாடம் அவனுாறென்று இருப்பதுடன் உரைப்பகுதியில் தலைமகட்கு வரும் இடையூறு கூறலும், தலைமகளைப் பகற்குறி விலக்கி இரவுக்குறி நீவா என்றலும் என உள்ளது. இவை அகப்பொருள் மரபன்று என்பதை அனைவரும் அறிவர். இப்பிழை சுவடி எழுத்தாளரின் சோர்வாலோ அன்றிச் சுவடியின் சிதைவாலோ ஏற்பட்டதாகலாம். ஏட்டுப் பாடம் ஐயமின்றித் தவறாக இருந்தால் சரியான பாடத்தினை ஏற்றல் தகும். ப.வெ.நா.