பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் 27 I 1178-231 இறைச்சி தானே யுரிப்புறத்' ததுவே. 34 பா.வே. 1. பொருட்புறத் - நச்சர். பாடம். + + "நாட்டிற்கும் ஊர்க்கும் நீர்த்துறைக்கும் அடைமொழியாகி வரும் கருப்பொருள் நிகழ்ச்சிகளாற் புலப்படத் தோன்றும் குறிப்புப் பொருளே இறைச்சி என வழங்கப்படும் என்பது இளம்பூரணர் முதலிய பண்டைய உரையாசிரியர்களின் கருத்தாகும். 'இறைச்சி தானே பொருட்புறத் ததுவே" என்பது நச்சர் கொண்ட பாடமாகும். 'கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மையுடையது இறைச்சி என்பதும். வடநூலார் இதனை நேயம் என்ற பெயரால் வழங்குதலும் பொருந்தும் என்பதும் நச்சர். கருத்தாகும்.' வெள்ளை. (பதிப்பு 64 பக். 108) இதனால் வெள்ளைவாரணனார் இருவர் பாடங்களையும் உரைகளையும் ஏற்றுக்கொள்கிறார் எனத் தெரிகிறது. இவ்விரண்டில் எது சிறப்புடையது என அவர் சுட்டிக் கூறவில்லை. ப.வெ.நா. "பறவை, விலங்கு முதலாயவற்றின் செயல்கள் ஒழுக்கம் எனப்படாமையான் உயர்தினை மாந்தர்க்குரிய ஒழுக்கமாகிய உரி என்னும் குறியிட்டினைச் சுட்டி அதற்கு மறுதலையாயது என்பது விளங்க அஃறிணைப் பொருள்களின் செயலும் பண்புமாகிய நடக்கையை உரிப்புறத்தது என்றனர் நூலோர்." "நச்சர். பொருட் புறத்ததுவே எனப் பாடங்கொண்டு கருப்பொருட்கு நேயந்தான் கூறவேண்டுவதன் பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மையுடையது என்று விளக்குதலான் கருப்பொருளே இறைச்சி என்பது அவர் கருத்தன்று என்பது தெளியப்படும். எனினும் பொருளின் புறத்தே தோன்றும் என்னும் விளக்கம் மயக்கந் தருவதாக உள்ளது." பால. (பதிப்பு 83 பக். 229, 230) "இளம்பூரணர் இறைச்சிப் பொருள் என்பது உரிப்பொருளின் புறத்தாகித் தோன்றும் பொருள். அஃதாவது கருப்பொருளாகி நாட்டிற்கும் ஊர்க்கும் துறைக்கும் அடையாகி வருவது என்பர். இறைச்சி என்பதற்குக் கருப்பொருட்கு நேயப்பொருள் என்றுகூறி அது கூற வேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மையுடைத்தாம் என நச்சர். விளக்குவர். இவ்விரு பாடங்களில் உரிப்புறத்ததுவே என இளம்பூரணர் கொண்ட பாடமே பொருத்தமாகும். உரிப்புறம் எனக்கூறுங்கால் கருப்பொருள் என்பது பொருளாகக் கிடைக்கும் இயல்பு பொருட்புறம் என்ற நச்சர். பாடத்தில் இல்லை. மேலும் உள்ளுறை உவமம் இறைச்சி முதலிய ஐந்தும் பெரும்பாலும் அகத்தினைப் பாடலுக்கே உரியவையாகும். (பொ. 45) அகத்தினைப் பாடல்களில் முதல். கரு உரி என்ற மூன்று பொருளும் இடம் பெறும். (பொ. 3) உள்ளுறை உவமம் தெய்வம் ஒழிந்த கருப்பொருளை இடமாகக் கொண்டு பிறக்கும். (பொ. 50) இறைச்சி உரிப்பொருளுக்குப் புறம்பாய் வரும். (பொ. 43) என்ற தொல்காப்பியர் கருத்துக்களை நினைவில் கொண்டு பார்த்தால் உரிப்புறத்தது என்ற பாடம் பொருத்தமாய் இருக்குமோ என்று எண்னவேண்டியுள்ளது எனக் கூறப்படும் கருத்தும் (உரையாசிரியர்கள் - மு.வை. அரவிந்தன் பக். 158) இப்பாடத்தை உறுதி செய்யத் துணையாக உள்ளது" வெ.ப. (பக். 208)