பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 பொருளதிகாரம் + 6. மெய்ப்பாட்டியல் 1198-251 பண்ணைத் தோன்றிய வெண்னான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ய: I பா.வே. 1. நானான்கென மொழி.ப - சுவடி 16. பிழை. யாப்பமைதி இல்லை. 1199-252 நாலிரண் டாகும் பாலுமா ருண்டே 2 1200-253 நகையே யழுகை விளிவரன்' மருட்கை(ய்) அச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென்(று) அப்பா லெட்டா மெய்ப்பா டென்ப 3 பா.வே. 1. யிழிவரன் - சுவடி 115. எழுத்துப்பிழை. எளி>ழி 2. ல்ெட்டே - பேரா. பால, பாடம். _ 1201-254 எள்ள லிளமை பேதைமை மடனென்(று) உள்ளப் பட்ட நகைநான் கென்ப. 4 டி மெய்ப்பாடுகளைப் பற்றி விளக்கவே தனியாக ஒர் இயலை அமைத்துக் கொண்ட ஆசிரியர் முதற்கண் மெய்ப்பாடாவது செய்யுளின் உறுப்புக்களுள் ஒன்று எனக்கூறிப் பிறகு அதன் வரைவிலக்கணம் சொல்லித் தொடர்வதே நேரிய நூலமைப்பு முறையாகும். பின்னர்ச் செய்யுளியலில் இச்செய்திகளை. மாட்டேற்றினால் சுட்டிச் சென்றிருக்க வேண்டும். அங்ங்ணமின்றி மெய்ப்பாடாவது யாது. அது எங்கு பயிலும் என்னும் அடிப்படைச் செய்தியையே இவ்வியலில் கூறாமல், செய்யுளியலுள். "உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும்', 'எண்வகை யியனெறி பிழையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே" (198, 197) எனக் கூறுகிறார். பாலசுந்தரனார் தம் காண்டிகையில் மெய்ப்பாடு செய்யுள் உறுப்பினுள் ஒன்று என்பதனான் அதன் இலக்கணத்தைச் செய்யுளியலுள் ஓதி வகையும் முறையும் பொருளும் பற்றி ஈண்டு விளக்கிக் கூறுகின்றார் - ஒராற்றான் பொருளியலோடு தொடர்புடைமை பற்றி என அறிக" (பக். 260) என்பது போதிய விளக்கமாகாது. இளம்பூரணரையுள்ளிட்ட உரையாசிரியர்களோ, உரைவளப் பதிப்பாசிரியர் போன்ற ஆய்வாளர்களோ க்ெகட்டுக்கோப்பச் சிகைவைச் சுட்டவில்லை. ப.வெ.கா. ".