பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EՁ0 பொருளதிகாரம் 1253-306 ஏனோர்க் கெல்லா மிடம்வரை வின்றே. 29 பா.வே. 1. காயி னிடம்வரை - சுவடி 115 பதிப்பு 2. 1254-307 இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியும் உவம மருங்கிற் றோன்று மென்ப. 30 - † 1255-308 கிழவோட் குவமை யிரிடத் துரித்தே. & I பா.வே. 1. குவம மீரிடத் - பேரா. பால. பாடம். 1256-309 கிழவோற் காயி னிடம்வரை வின்றே. 32 1257-310 தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற் குரியர்' கொள்வழி யான. 3.3 பா.வே. I. குரிய - பதிப்பு 2 அச்சுப்பிழை ரகரமெய் விடுபட்டது. 1258-3.11 வேறுபட வந்த வுவமைத்' தோற்றங் கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளஅல். 34 பா.வே. 1. வுவமத் - பேரா. பால. பாடம். + "இச்சூத்திரம் 'தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது' என்பதனோடு நோக்குடையதாகும். அது கருதிப் பேரா. இந் நான்கு துத்திரங்களையும் இரண்டு துத்திரமாக அமைத்துக் கொண்டார் எனத் தெரிகின்றது. அங்ங்னம் இணைத்துக் கூறல் சூத்திர யாப்பு நெறிக்கு ஏற்புடைத்தாகாது." பால. (பதிப்பு 83 பக். 382) "இனிக் கிழவோட் குவமம் பிரிவிடத் துரித்து' என்பது பாடமாக உரைப்பாரும் உளர். யாதானுமொரு நிலத்தாயினும் பிரிந்திருந்தவிடத்து உள்ளுறையுவமங் கூறட் பெறுங் கிழத்தியென்பது இதன் கருத்து. பெருந்தண்வாடையின் முந்துவந்தோன் என்பது பிரிவன்றாகலின் சரிடமென்றலே வலிதென்பது." பேரா. விசேட உரை. "பிறர் கருத்தாகக் கூறும் பாடமும் உரையும் யாருடையது எனத் தெரிந்திலது." சுந்தர (பதிப்பு 74 பக். 169)