பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 பொருளதிகாரம் 1256-319 இருவகை யுகரமொ டியைந்தவை வரினே நேர்பு நிரைபு மாகு மென்ப குறிலிணை யுகர மல்வழி யான 4 இதன் மூன்றாமடியைப் பேராசிரியரும் நச்சரும் தனி நூற்பாவாகக் கொள்வர். 1867-320 இயலசை முதலிரண் டேனைய வுரியசை' 5 பா.வே. 1. டேனவை யுரியசை - இளம்பூரணர் பாடம். டேனை யுரியசை - பதிப்பு 70இல் சுவே. 1268-321 தனிக்குறின் முதலசை மொழிசிதைந்' தாகாது. G பா.வே. 1. மொழிசிதைத் - பேரா. நச்சர். பாடம். 1269-322 ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம். 7 | I -i -i 1270-323 முற்றிய லுகரமு' மொழிசிதைத்துக் கொளஅ' நிற்ற லின்றே யிற்றடி மருங்கினும். 8 பா.வே. 1. லுகர - சுவடி 575. முகரம் விடுபட்ட பிழை. 2. கொள்ளா - சுவடி 1. பிழை. பொருளில் பாடம். கூற்றாகவே இருத்தலானும் அந் நூற்பாவிற்கு வேறுபாடம் இருக்க வேண்டும் என்று கருதி எல்லாப் பிரதிகளையும் நோக்கினேன். நோக்கியபொழுது தொன்னூல் விளக்கத்தில் மட்டும். நேரும் நிரையும் என்றி.சி னோரே எனப் படர்க்கைப் பாடம் இருக்கக் கண்டேன். இதுவே பொருந்தும் என்பது என் கருத்து." அடிகள். (பதிப்பு 70 பக். 22) "என்றி.சினோர் என்பது கடைக்குறைந்து நின்றது. (அதாவது ஓர்கெட்டு என்றிசின் என நின்றது) பால. (பதிப்பு 89 பக். 45) இலக்கண மாற்றமோ, பொருள் மயக்கமோ வராமல் சொற்களை முதல். இடை கடையில் குறைத்துக் கொள்ளலே நேரிது. படர்க்கைச் சொல்லைத் தன்மைப் பொருள் தருமாறு குறைத்தல் விரும்பத் தக்கதன்று. மேலும் நேர் நிரை போன்றன படர்க்கைப் பெயர் என மிக எளிதில் விளங்கும். இக்காரணங்களால் அடிகள் கூற்று ஏற்கத்தக்கது. ப.வெ.நா.