பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 299 1300-353 மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே(ய்) ஈரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப: 38 பா.வே. 1. மிகுத லிவட்பெறு மென்றே - சுவடி 43A பதிப்பு 24 இல் சு.வே. மிகுதலு மீறுபெறு மென்ப - சுவடி 16. மிகுதலு மிவட்பெறு மென்ப - பதிப்பு 22இல் சு.வே. 1801-354 முவா றெழுத்தே கழிநெடிற் களவேள்) | == #2 ஈரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப". 39 பா.வே. 1. றெழுத்துங் - சுவடி 1 உம்மை மிகை. 2. மிவட்பெறு மென்ப - பேரா. நச்சர். பாடம். 1302-355 சீர்நிலை தானே யைந்தெழுத் திறவாது. 40 இந்நூற்பாவையும் அடுத்ததையும் இணைத்து ஒரே நூற்பாவாக இளம்பூரணர் கொள்கின்றார். "இச் தத்திரத்தில் ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே' என இளம்பூரணர் முதலியோர் பாடங்கொண்டனர். 'ஒத்த நாலெழுத் தொற்றலங் கடையே’ ЕТТ&T யாப்பருங்கலவிருத்தியுரையாசிரியர் கொண்டனர். தொல்காப்பியவுரைகளிற் காணப்படும் ஏற்றலங்கடையே என்ற தொடர் ஏற்றமாய் வராதவழி என்னும் பொருளைத் தெளிவாகத் தராமையானும், எழுத்துக்களை எண்ணி அடிகளை ஐவகையாகப் பகுக்குமிடத்து ஒற்றெழுத்துக்களும் ஒற்றின் தன்மையவாகிய குற்றியலிகரம். குற்றியலுகரம். ஆய்தம் என்னும் எழுத்துக்களும் எண்ணப்படா என்பதனை வெளிப்படக்கூறுதல் ஆசிரியர் கடமையாதலானும் ஒற்றலங்கடையே என யாப்பருங்கலவிருத்தியாசிரியர் கொண்ட பாடமே பொருட்பொருத்தமுடையதாகும். ஐவகையடிகட்கும் நடுவனதாகிய நேரடிக்குக்கூறிய ஒற்றலங்கடையே என்ற தொடர் இதன்முன் கூறப்பட்ட குறளடி சிந்தடிகளோடும் இதன் பின்னர்க் கூறப்படும் நெடிலடி கழிநெடிலடிகளோடும் சென்றியையும்வண்ணம் இச்சூத்திரத்துட் சிங்க நோக்காக அமைந்துள்ளமை நுணுகியுணரத் தகுவதாகும்." வெள்ளை. (பதிப்பு 81 பக். 187) இங்கு ஒற்றலங்கடையே என்பதனைச் சிங்க நோக்காகக் குறளடி முதலிய ஐவகை அடிகளுக்கு மட்டும் கொண்டால். "சீர்நிலை தானே ஐந்தெழுத்து இறவாது நேர்நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும் என்னும் நூற்பாவிற்குப் பொருந்தாதா? "உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ" எனப் பின்னர்க் கூறப்பெறுவதால் இப்பாடம் கூறுவது கூறுலாகாதா? அதுவாதம் எனக் கொள்ளலாகாதோ எனின் முதலில் விதி கூறிய பிறகே அதுவதிக்க வேண்டுமாதலின் அவ்வாறு கொள்ள இயலுமா? என்பன போன்ற தடைகள் இருப்பதால் வெள்ளைவாரணனாரின் இக்கருத்து ஆழமான மறுபரிசீலனைக்கு உரியது. ப.வெ.நா.