பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M31 O பொருளதிகாரம் + 3. தொன்றுதலை - சுவடி 73 பால. பாடம், 4. எழுநூறு - பதிப்பு 120 5. ஒன்று மென்ப - இளம்பூரணர் பால. பாடம். டி தொன்று எனப் பாடங்கொள்ளும் பால. கூறுவதாவது:- "தொன்று என்னும் பாடத்தை யாவரும் தொண்டு என்றே வைத்து அதற்கு ஒன்பது எனப்பொருள் கூறியுள்ளனர். தொண்டு என்பதற்கு உரிச்சொற் பகுதி தொள் என்பதாகும். இதனடியாகத் தொளை, தொள்ளை, தொளி, தொடு, தொண்டு, தோண்டு என்னும் பெயரும் வினையுமாகிய சொற்களே பிறக்கும். அவ்வழித் தொண்டு என்பது வளைவு. சுளிவு. நெளிவு. தொய்வு. குணிவு, தளர்வு என்னும் பொருள் தருதலன்றித் தொன்மை, முன்மை. பழமை என்னும் பொருள் பயத்தல் இல்லை. பத்தென்னும் எண்ணிற்குத் தொன்மையாயது என்பதைக் குறிக்க ஆசிரியர் தொன்று எனக் கூறியுள்ளார். இதன் உரிச்சொற் பகுதி தொல் என்பதாகும். இதன் வழித் தொல், தொல்லை. தொலை. தொன்மை, தொன்று என்னும் பெயர்கள் பிறக்கும். எனவே தொண்டு என்னும் சொற்குத் தொன்மை என்பது பொருளாகாமை தெரியலாம். இனி, மலைபடு கடாத்தில் வரும். தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவு' என்பதற்குப் பொருள் இறுக்கவும் தளர்க்கவும் ஏற்பச் சுற்றி வளைத்துக் கட்டப்பெற்ற திவவு' என்பதாகும். திவவு வார்க்கட்டு, தொடித்திரிவன்ன என்ற உவமத்தானும் அஃது உணரப்படும். இனிப் பரிபாடல் 3இல் வரும். ஆறென ஏழென எட்டெனத் தொண்டென நால்வகை ஊழி.எண் என்னும் அடியில் வரும் தொண்டு ஏடெழுதுவோரால் நிகழ்ந்த பிழையாகும். அஃது, ஏழென எட்டெனத் தொன்றென என்றே இருத்தல் வேண்டும். தொன்றுதொட்டு என்பது தொண்டுதொட்டு எனப் பேச்சுவழக்கில் திரிந்த பிழைவழக்கை ஆராயாமல் நோக்கித் தொண்டென்பதற்குப் பழையது. முந்தியது எனத் தவறாகப் பொருள் கொண்டனர் போலும். அன்றித் தொன்றென்பதன் அடியாகப் பிறந்து திரிந்த தொண்ணுாறு. தொள்ளாயிரம் என்பவற்றுள் தொண் - தொள் என்பவை முதனிலையாக நிற்றலை நோக்கி அதுவே உண்மை எனவும் கருதியிருக்கலாம். அவை தொல்நூறு. தொல்லாயிரம் என்பவற்றைத் திரித்து அமைத்துக் கொண்டவையே. (பதிப்பு 89 பக் 80, 81)

  • இளம்பூரணம் பதிப்பு 24இல், எழுநூற் றொன்பஃ தென்ப என உள்ளது. இதே இளம்பூரணம் பதிப்பு 70இன் பாடம். எழுநூறு ஒன்று மென்ப என்பதாம். இவ்வேறுபாடு பற்றி வெள்ளை கூறும் விளக்கம் வருமாறு:

"வடிவு பெற்ற மரபினையுடைய தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணுாற்றொன்பது என இளம்பூரணர் இச்தத்திரத்திற்குப் பொருள் கொண்டிருத்தலால், மெய்பெறு வகையிற் றொடைவகை தாமே யையிராயிரத் தாறைஞ் நூற்றொடு தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூ றொன்று மென்ப வுணர்ந்திசி னோரே என்பதே இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் கொண்ட பாடம் என்பதும், தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற் றொன்பல் தென்ப என்பது பேராசிரியர் கொண்ட பாடம் என்பதும், அஃது ஏடெழுதுவோரால் இளம்பூரணருரையில் தவறாகச்