பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 3 II 1362-415 தெரிந்தனர் விரிப்பின் வரம்பில வாகும்.' I00 بسمG.معي 1. பல்கும் - பேரா. நச்சர். பாட்ம். 1363-416 தொடைநிலை வகையே யாங்கென மொழிப." 101 பா.வே. 1. தொடைவகை நிலையே - பேரா. நச்சர். பாடம். 1364-417 மாத்திரை முதலா வடிநிலை காறும் நோக்குதற் காரண நோக்கெனப் படுமே. 102 பா.வே. 1. வடிநிறை - பேரா. நச்சர். பாடம். சேர்க்கப்பட்ட தென்பதும் இவ்விருவர் உரையினையும் ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது விளங்கும்." (பதிப்பு 8.1 பக். 456) இந் நூற்பாவின் பாட வேறுபாடுகள் பற்றிய உரையாசிரியர்களின் கருத்துக்களையும் ஆய்வுரைகளையும் வெள்ளைவாரணனாரின் தொல்காப்பியச் செய்யுளியல் உரைவளத்தில் (பதிப்பு 81) காண்க. + "தொல்காப்பியர் எடுத்துக்கொண்ட செய்தி முடியுமிடத்தே முடிக்கும் நூற்பாவைக் கூறுவது வழக்கம். தூக்கினை முடிக்குமிடத்தே. தூக்கியல் வகையே ஆங்கென மொழிப' (செய். 83) என்றும். தொடைநிலை வகையே ஆங்கென மொழிப' என்றும், பாக்களின் அளவியலைக் கூறி முடிக்குமிடத்து. அளவியல் வகையே அனைவகைப் படுமே (செய். 156) என்றும். செய்யுள் அளவியலைக் கூறி முடிக்குமிடத்து. கிளரியல் வகையிற் கிளந்தன தெரியின் அளவியல் வகையே அனைவகைப் படுமே (செய் 178) என்றும். கைகோள்களை எடுத்துக்கூறி முடிக்கும்பொழுது, மெய்பெறு மவையே கைகோள் வகையே (செய். 180) என்றும் வண்ணத்தைக் கூறி முடிக்கும்பொழுது. 'வண்ணந்தாமே யிவையென மொழிப' (செய். 228) என்றும் கூறுவனவற்றைக் காண்க இத்தகைய நூற்பாக்கள் எல்லா உறுப்பிற்கும் இருந்திருக்கலாம். அவை சிதைந்தன போலும். இம்மாற்றம் உரைகாரர்களுக்கு முற்பட்டு நிகழ்ந்ததாதல் வேண்டும். இவை எண்ணிக்கையில் மிகவும் குறைவாதலின் இடைச்செருகல் ஆகலாம் எனவும் சிலர் கருதுவர். அடிகள். (பதிப்பு 70 பக். 173-174)