பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 3 IT 1:34-447 இடைநிலைப் பாட்டே I தரவகப் பட்ட மரபின தென்ப. I 32 ப.வே. I வெண்ப’-இளம்பூரணர், பால. பாடம். 1995-448 அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகு மாங்கென மொழிப." 1.33 ப.வே. 1 இடைநிலைக்-சுவடி பதிப்புகள் 24, 70 இல் சு.வே. 2. மாங்கென் கிளவி"-பேரா. நச்சர் பாடம், 1336-449 போக்கியல்' வகையே வைப்பெனப் படுமே. 134 இதனோடு அடுத்ததையும் இணைத்து இளம்பூரணர் ஒரே நூற்பாவாகக் கொண்டுள்ளார். 1. போகியல்-சுவடி 73, எழுத்துப்பிழை. ககர மெய் விடுபட்டது. H 'கசவகப் பட்ட மரபின தென்ப என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். ஒத்து மூன்றடுக்கி வருவன ஒத்தாழிசையாதலின் மரபின (வென்ப) என்ற பாடமே சிறப்புடையது." வெள்ளை (பதிப்பு 81 பக். 544 அடிக்) "இளம்பூரணர் இந்நூற்பாவின் இறுதியை ஆங்கென மொழிப எனப் பாடம் ஒதி. ஆங்கு அசை என்றார். பேராசிரியரும் நச்சரும் ஆங்கென் கிளவி எனப் பாடம் ஒதி. தாழிசைப் பின்னர் ஆங்கு தனிச் சொல்லாய் நின்று பயிலும் என்பர். கவிப்பாவில் ஆங்கு என்னும் சொல் தனிச்சொல்லாய் வரும் என்பதை, 'ஆங்கு என் கிளவி அடையாத் தொடைபட நீங்கி யிசைக்கும் நிலையது தனிச்சொல்' (யாவி.கழக.பக்.300) என்னும் காக்கைபாடினியத்தால் அறிந்து கொள்ளலாம். எனவே, காக்கைபாடினியச் சான்றிருத்தலால் ஆங்கென் கிளவி ' என்ற பாடமே நன்று." அடிகள். (பதிப்பு 70 பக்.246) ஆங்கு என்பதே தனிச்சொல்லாக வருமென்பார் நச்சர். பேராசிரியரும் இன் ஆத்தினரே, அது குன்றக் கூறலாமாறுனர்க" பால. (பதிப்பு 89 பக்.114)