பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் * 19 1400-453 வண்ணகந் தானே தரவே தாழிசை யெண்னே வாரமென்(று) அந்நால் வகையிற் றோன்று மென்ப. IoE LJITELJ. முதலடியில் முதற்சீராக அவற்றுள் எனச் சேர்த்துக் கொள்வார். 1401-454 தரவே தானும் நான்கு மாறு மெட்டு மென்ற நேரடி பற்றிய நிலைமைத் தாகும். Io9 1402-455 ஒத்துமூன் றாகு மொத்தா ழிசையே. 140 இளம்பூரணர் இதனையும் அடுத்ததையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொண்டுள்ளார். 1403-456 தரவிற் சுருங்கித் தோன்று மென்ப. 141 1404-457 அடக்கியல் வாரந் தரவோ டொக்கும். 142 1405-458 முதற்றொடை பெருகிச்' சுருங்கும னெண்ணே. 143 பா.வே. 1. பெருக்கிச்-சுவடி 575 பிழை. தன்வினையே பொருந்தும்.

  • இளம்பூரணருரை பேராசிரியருரை நச்சருரைகளில் இந்நூற்பாவிற்குத் தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே என்ற பாடமே உள்ளது. வ.உ.சி. பராஅ என்றொரு பாடம் காட்டுகிறார். அது மவ்விற்றொற்று அழிந்த பாடம். அவ்வீறு இருப்பின் பராஅம் என்று இருக்கும்.

இனி, இளம்பூரணர் உரையைப் பதவுரையாக்கிப் பார்ப்போம். '... தேவர்ப் பராஅம்-தேவரைப் பராவும் பொருண்மைத்து ' என ஆகும். இங்கே பராஅம் என்பது முற்று. பராஅய என்ற பாடம் மூன்றாசிரியர் உரையுடனும் பொருந்தவில்லை. 'ஏனை ஒன்றே தேவரைப் பரவிய முன்னிலைக் கண்ணது' என்று உரை கூறினால் பராஅய என்பதை எச்சமாகக் கொள்ளலாம். அடியார்க்கு நல்லார் ' ஏனை யொன்றே தேவர்ப் பராவுதன் முன்னிலைக் கண்னே ' (சிலப்.கடலாடு.35) எனப்பாடம் ஒதுவர்." அடிகள். (பதிப்பு 70 பக்.250-251)