பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 3.31 1412-465 எருத்தே கொச்சக மராகஞ் சிற்றெண் அடக்கியல் வாரமொ டந்நிலைக் குறித்தே I of 0 பா.வே. + 1. வாரமொ டைந்நிலைக்-பேரா. பாடம் என்பது பதிப்பு 70 வாரமோ டைந்நிலைக்-நச்சர். பாடம் என்பது பதிப்பு 70 1413-486 ஒருபொரு ணுதலிய வெள்ளடி யியலாற் றிரியின்றி முடிவது கலிவெண் பாட்டே 151 பா.வே. 1. நிரிவின்றி -சுவடி 1, 15, 575 பதிப்பு 44 2. வருவது -பேரா.நச்சர். பாடம். I 1414-467 தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் ஐஞ்சீ ரடுக்கியு மாறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் டி. ஐந்நிலை என்பது பேரா.நச்சர் பாடம் என்னும் அரிய செய்தியை அடிகள். தெளிவாகக் காட்டுகிறார். ஆனால் பேரா. பதிப்புகள் 33, 74 நச்சர் பதிப்பு 44. உரை வளப்பதிப்பு 81 ஆகியன அந்நிலை என்பதனையே மூலபாடமாகக் கொண்டுள்ளன. பேரா.நச்சர் இருவரும். ஐந்துறுப்புடையது அம்போதரங்க ஒருபோகு ' என்றே உரை கூறுவதை நோக்க அவர்களின் பாடம் ஐந்நிலை என்பதே என்பது இனிது விளங்கும். இதனால் மேற்கண்ட பதிப்புகளின் மூலபாடமாகிய அந்நிலை என்பதை அச்சுப்பிழையாகவே கருதவேண்டியுள்ளது. ப.வெ.நா.

  • தொல்.செய்.பேரா. உரைப்பதிப்பில் ' திரிபின்றி வருவது என்றும், நச். உரைப்பதிப்பில் திரிவின்றி வருவது என்றும் . காணப்படுகின்றன. ஆனால் பேரா. இத். நூற்பா உரையில், திரிபின்றி முடியும் என்றதனானே' என்றெழுதுவதை நோக்கினால் திரிபின்றி முடிவது என்ற பாடமே கொண்டார் போலும். இதுவே இளம்பூரணர் பாடம்" அடிகள். (பதிப்பு 70 பக்.274 அடிக்.)
  • இனி இந் நூற்பாவின்கண் முடிவது என்றுள்ள பாடத்தை வருவது எனக் கொண்டும். கொச்சகக் கலிப்பாவிற்குரிய இலக்கண நூற்பாவின் (து.154) முதல் மூன்றடிகளைத் துணித்து அவையும் கலிவெண்பாட்டிற்கே இலக்கணங் கூறுவதாகவுங் கொண்டு பேரா. உரை கூறியுள்ளார்." பால. (பதிப்பு 89 பக்.129)