பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 32 பொருளதிகாரம் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே". 152. இதன் முதல் மூன்றடிகளை ஒரு நூற்பா ஆகவும், பின் இரண்டு அடிகளை வேறொன்றாகவும் பேரா. நச்சர். இருவரும் கொள்வர். பா.வே. 1. இடையிடை-இளம்பூரணர் பாடம், 1415-468 கூற்று மாற்றமு மிடையிடை மிடைந்து' போக்கின் றாக லுறழ்கலிக் கியல்பே. II, 3 பா.வே. 1. மிடைந்தும்-பேரா. நச்சர். பால. பாடம். 2. நாத-நச்சர். பால. பாடம். + "இதன் முதல் மூன்றடியும் ஒரு சூத்திரமாகவும் பின்னிரண்டடியும் மற்றொரு சூத்திரமாகவும் கொண்டு. அவற்றுள் முன்னையது வெளிப்படு பொருளினதாய் விரவுறுப்புடைய வெண்கலியின் இயல்புணர்த்தியதென்றும். பின்னையது மேலே ஒரு போகெனக் கூறப்பட்ட கொச்சகப் பாநிலை வகையான அகநிலைக் கொச்சகக் கலியின் இயல்புணர்த்திற்றென்றும் பேராசிரியரும் நச்சரும் பகுத்து உரை கூறி விளக்கியுள்ளனர் அன்னோர் கருதுமாறு.'வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் ' என்னும் பயனிலைக்கு வெளிப்படு பொருட்டாகிய வெண்கலிப்பா என்பது எழுவாயாக வந்து இயைந்தது என்பதற்கு ஏற்ப அவ்வெழுவாய் முன்னைய தத்திரங்களில் தெளிவாக இடம்பெறாமையானும், "பாநிலை வகையே கொச்சகக்கலி என்பதில் பாநிலைவகை யென்றது இன்ன பாவினது நிலையும் வகையும் என்பது விளங்கும் வகையில் அத்தொடர்ப் பொருளை அறிந்து கொள்ளுதல் இயலாதாகலானும், கலிப்பாவினை நால்வகைப்பட விரித்துரைக்கும் தொல்காப்பியனார் நிறுத்த முறையானே நான்காம் வகையாகிய கொச்சகத்தின் இலக்கணம் இதுவென்று உணர்ந்துகொள்ள இயலாதவாறு 'பாநிலை வகையே கொச்சகக்கலி (Пtof விளங்காவகையாற் சூத்திரம் செய்யாராகலானும் இளம்பூரணர் கொண்ட வண்ணம் இதனை ஒரு சூத்திரமாகக் கொண்டு. கொச்சகக்கலியாமாறு உணர்த்திற்று என்று கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும்." வெள்ளை (பதிப்பு 81 பக்.908) "இச் சூத்திரத்தை இரண்டாக்கிப் பேரா. கூறும் உரைக் கருத்துக்கள் நூல்நெறிக்கு ஒவ்வாமையை அவருரையையே நோக்கித் தெளிக விரிப்பின் பெருகும்." பால, (பதிப்பு 89 பக்.132)