பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 1. நூன்மரபு 1. எழுத்தெனப் படுப' அகரமுத னகர விறுவாய் முப்பல் தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே. I பதிப்புகள் 1.5 இரண்டிலும் இந்நூற்பா மூன்றடிகளை உடையதாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பதிப்புகள் 13, 14, 15, 25, 38 ஆகியவற்றில், எழுத்தெனப் படுவ - அகர முதி னகர விறுவாய் முப்பக் தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே என நான்கடிகளை உடையதாக உள்ளது. பதிப்புகள் 36, 47, 52, 87 ஆகியவற்றில், எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே என வேறு வடிவத்தில் காணப்படுகிறது. பா.வே. 1. அகர முதன்னகர - பதிப்பு 85, இங்கு விரித்தல் விகாரம் தேவையின்மையின் இப்பாடம் பொருந்தாது. 2. அவைதாம் குற்றிய லிகரங் குற்றிய லுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன. £ படுப என்பதனைப் பால. பதிப்பு 77 இல் படுவ எனத் திருத்திப் பாடங் கொண்டுள்ளார். இதற்குச் சுவடிச் சான்று இல்லை.