பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3호 பொருளதிகாரம் 4 யளவி-பேரா. நச்சர். பால, பாடம். == - * -- -= o * + 5. இவ்வடி பதிப்பு 120 ஒன்றில் மட்டுமே காணப்படுகிறது. == இவ் வடியைப் பற்றி அடிகள் கூறுவதாவது - "(யாப்பருங்கல) விருத்தியாசிரியர் தொல். செய்யுளியவில் அளவென்னும் உறுப்பினைக் கூறும் நூற்பாக்களில், ஆசிரியப்பாவின் அளவிற்கு (150) என்றும். ஆசிரிய நடைத்தே (104) என்றும். நெடுவெண் பாட்டே (151) என்றும், அங்கதப் பாட்டவற் (158) என்றும் வரும் நூற்பாக்களை அடிவரையறைக்கும். கலிவெண்பாட்டே . அளவில வென்ய (163) என்றும், முடிபொரு எல்லா தடியள விலவே (153) என்றும் வரும் நூற்பாக்களை அடிவரையறை யில்லாமைக்கும் எடுத்துக்காட்டி, 'என்றார் தொல்காப்பியர்' என்பர். இவர் கூற்றின்படி மேற்காட்டிய நூற்பாக்கள் எல்லாம் தொல்காப்பிய நூற்பாக்களாக வேண்டும். ஆனால் மேல் நூற்பாக்களில் ஈற்றில் வந்துள்ள முடிபொரு எல்லா தடியள விலவே என்னும் நூற்பா இளம்பூரணர், பேரா. நச்சர் உரையிலுள்ள மூலங்கள் ஒன்றிலும் காணப்படவில்லை. பின்னர் அம்மூவர் உரையையும் கூர்ந்து பார்த்தஅளவில் அவ்வுரைகளில் இளம்பூரணர் உரை, கலிவெண் பாட்டே (153) என்னும் மேற்கண்ட நூற்பாவிற்கு . பொருண் முடியுங்காறும் வேண்டிய அடி வரப்பெறும் ' என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வுரையுள் . பொருள் முடியுங்காறும் வேண்டிய அடி வரப்பெறும் ' என்ற உரை. 'முடிபொரு ... விலவே' என்ற அடிக்கும் பொருளாயிருத்தலை உணர்ந்தேன். இளம்பூரணர் அவ்வாறு உரையெழுதியுள்ளதால் அந் நூற்பாவிற்கு கலிவெண்பாட்டே . தடியள விலவே என்ற நான்கடி நூற்பாவாக அவர் பாடங்கொண்டிருந்தார் என்பது தெளிவாகப் புலனாகின்றது. ஆனால் பேராசிரியரும் நச்சரும் கலிவெண்பாட்டே என்னும் இந் நூற்பாவின் மூன்றாவது அடியைத் தொகுநிலை யளவி னடியில வென்ப எனப் பாடங்கொண்டு மூன்றடி நூற்பாவாகவே அமைத்துக்கொண்டு அதற்கியைய உரை எழுதியுள்ளனர். இளம்பூரணர் உரைப்பிரதியில் மூலபாடம் மூன்றடியாகவே உள்ளது. ஆனால் உரை 'முடிபொரு ... விலவே' என்ற மற்றொரு அடிக்கும் எழுதப்பட்டுள்ளது. . இவற்றால் நாம் உணர்ந்து கொள்வன: 1. கலிவெண் பாட்டே என்ற நூற்பாவினை நான்கடி நூற்பாவாகவே கொண்டு இளம்பூரணர் உரையெழுதியுள்ளார் என்பதும் 2. யா.க.வி. ஆசிரியரும் இளம்பூரணரைப் போலவே பாடங் கொண்டிருந்தார் என்பதும் 3. ஏடு எழுதியவர் பேரா. நச்சர் கொண்ட பாடம்போல் மூன்றடி நூற்பாவாகவே எழுதிவிட்டனர் என்பதுமாம். " (பதிப்பு 70 பக்.292-294) அடிகளாசிரியரின் இக்கருத்து ஏற்புடையதாக இருத்தலால் இப்பதிப்பில் இந்நூற்பா நான்கடிகளை யுடையதாகக் கொள்ளப்பட்டுள்ளது. இது உரையின்வழி மூலபாடத்தை நிர்ணயித்தலின்பாற்படும். ப.வெ.நா.