பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.30 பொருளதிகாரம் 1442-495 அடியிகந்து வரினுங் கடிநிலை யின்றே. 180 1443-496 கிளரியல்' வகையிற் கிளந்தன தெரியின் அளவியல் வகையே யனைவகைப் படுமே. 181 பா.வே. 1. கிளரிய-நச்சர். பாடம். 1444-497 கைக்கிளை முதலா யெழுபெருந்' திணையும் முற்கிளந் தனவே முறைநெறி வகையின்: 182 பா.வே. 1. யேழ்பெருந்-இளம்பூரணர். பால. பாடம். 2. முறையி னான-இளம்பூரணர் பாடம். முறை(மை)யி னான-பால. பாடம். 1445-498 காமப் புணர்ச்சியு மிடந்தலைப் பாடும்' பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென்(று) ஆங்கநால் வகையினு மடைந்தசார் போடு" மறையென மொழிதன் மறையோ ராறே. - 183 பா.வே. 1. படலும்-இளம்பூரணர், பால. பாடம். 2. மடைந்த சார்வொடு-இளம்பூரணர், பால, பாடம். மடைந்த சார்பொடு-பேரா. பாடம். மறைந்த சால்பொடு-பதிப்பு 70 இல் சு.வே. பேரா. உரையால் அவர் கொண்ட பாடம் இன்னது எனத் தெளியலாமேயன்றி அதுவே தொல்காப்பிய மூலபாடம் எனத் துணிய இயலாது. இந் நூற்பாவிற்கு இளம்பூரணர், நாற்சீரடியின் மிக்குவரும் பாட்டுப் பன்னிரண்டும் என உரை கூறுவதால் அவர் கொண்ட பாடம் அடிநிமிர் கிளவி என்பதுதான் எனப் புலனாகிறது. இந் நூற்பாவிற்கான நச்சர் உரை கிடைக்காததால் அவருடைய பாடம் இன்னதெனத் துணிய இயலவில்லை. இவ்வாறு இந் நூற்பாவிற்கு இரண்டு பாடங்கள் கிடைக்கின்றன. பொருளில் மாறுபாடின்மையால் காலப்பழமை கருதி இப் பதிப்பில் அடிநிமிர் கிளவி என்பது ஏற்கப்பட்டுள்ளது. ப.வெ.நா.