பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3,32 பொருளதிகாரம் 2. பார்ப்பார்-சுவடி 115, பிழை, ஒருமையே பொருந்தும். + 3. கிளவியொடு-பேரா. நச்சர் பாடம். 1450-503 ஊரு மயலுஞ் சேரி யோரும் நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்னையுங் கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது கூற்றவ ணின்மை யாப்புறத் தோன்றும். 188 பா.வே. 1. நோய்மருந் தறிநரும்-சுவடி பொருந்தாப் பாடம். நோய்மருங் கறிஞரும்-சுவடி 115 2. தல்லதைக்-நச்சர். பாடம். 1451-5.04 கிழவன் றன்னொடுங் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறன் முற்றத்தோன் றாது. 189 I 1452-505 ஒண்டொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. 190 பா.வே. 1. மாதர்க்-பதிப்பு 24 அச்சுப்பிழை. 1453-506 இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு வழக்கிய லாணையிற் கிளத்தற்கு முரியன். 19 I டி "அறுவரொடு தொகைஇ என இளம்பூரணரும், முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகை_இ எனப் பேரா. நச்சரும் பாடங்கொண்டுள்ளனர். இந் நூற்பாவில் பாணன் முதலாக அறுவரும். முன் நூற்பாவில் பார்ப்பான் முதலாக அறுவரும் கூறப்பட்டுள்ளனர். இவர்கள் கற்பின்கண் கூற்று நிகழ்த்துதற் குரியார் என்பதே நூற்பாவின் கருத்து. முன்னர்க் கூறப்பட்ட கிளவியொடு என்பதைவிட அறுவரொடு என்ற பாடமே பொருத்தமாக உள்ளது. எனவே இங்கு இளம்பூரணர் கொண்ட பாடமே சிறப்புடையது." வெ.ப. (பக்.216)