பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J44 பொருளதிகாரம் 9. மரபியல் 1503-556 மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற் பார்ப்பும் பறழுங் குட்டியுங் குருளையுங் கன்றும் பிள்ளையு மகவு மறியுமென்று' ஒன்பதுங் குழவியொ டிளமைப்’ பெயரே. 1 பா.வே. 1. மறியும்-பதிப்பு 24 இல் சு.வே. 2. டிளைமைப்-பேரா.பாடம். 1504-557 ஏறு மேற்றையு மொருத்தலுங் களிறுஞ் சேவுஞ் சேவலு மிரலையுங் கலையும் மோத்தையுந் தகரு முதளு மப்பரும்" போத்துங் கண்டியுங் கடுவனும் பிறவும் யாத்த வாண்பாற் பெயரென மொழிப. 2 பா.வே. 1. எருது-இளம்பூரணர் பாடம். + 2. மும்பலும் -சுவடி 73 பதிப்பு 22 பதிப்பு 38 இல் சு.வே. 1505-558 பேடையும் பெடையும் பெட்டையும்' பெண்ணும் மூடு நாகுங் கடமையு மளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்: அந்தஞ் சான்ற பிடியொடு’ பெண்ணே. 3. பா.வே. 1. பெட்டையும் பெடையும்-சுவடி 16,73.115 2 பினாவும்-சுவடி 73.115 பால.பாடம். 3. பிடியொடும்-சுவடி 73. + "இங்குக் குறிப்பிடப்பெறும் ஆண்பாற் பெயர்கள் பின்னே நூற்பாக்களில் பயில்பவை. மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் யாத்த வென்ப பாட்டின் கண்ணே'(பொ.592) எனவரும் நூற்பாவில் பயின்ற சொற்களே முன்னரும்(பொ.546) அமைந்தன. பின்னுள்ள நூற்பாவில் அப்பரும் என்றே உள்ளதால் உம்பலும் என்பது பொருத்தமில்லாத பாடம் என்பது தெளியப்படும். 'அப்பரென்பது இக் காலத்து வீழ்ந்தது போலும்'என்ற பேராசிரியரின் குறிப்புரையால் வழக்கிழந்த சொல்லை விடுத்துப் பிறிதொரு சொல்லைப் புகுத்தும் முயற்சியால் இப்பாடம் பிறந்திருக்கலாம்".வெ.ப.(பக்.219)