பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 349 1535-588 மக்க டாமே யாறறி வுயிரே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே." J.3 1536-589 வேழக் குரித்தே விதந்துகளி றென்றல், 34 பேரா. பால. இருவரும் அடுத்ததையும் இதனுடன் இணைத்து ஒரே 曹 நூற்பாவாகக் கொண்டுள்ளனர். 1537-590 கேழற் கண்ணுங் கடிவரை யின்றே. 35 1538-591 புல்வாய் புலியுழை மரையே கவரி சொல்லிய கராமோ டொருத்த லொன்றும். 36 1539-592 வார்கோட்டி யானையும் பன்றியு மன்ன. 37 1540-593 ஏற்புடைத் தென்ப வெருமைக் கண்ணும். 38 1541-594 பன்றி புல்வா யுழையே கவரி(ய்) என்றிவை நான்கு மேறெனற் குரிய. 39 1542-595 எருமையு மரையும் பெற்றமு மன்ன. 40 1543-596 கடல்வாழ் சுறவு மேறெனப் படுமே. 41 1544-597 பெற்ற மெருமை புலிமரை புல்வாய் மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே". 42 பா.வே. 1. போத்தெனக் குரிய-சுவடி 115. இது போத்தெனற் குரிய என இருந்திருக்கலாம். - இதனையடுத்து வ.உ.சி. பதிப்பில் (24) ஒருசார் விலங்கு முளவென மொழிப என ஒரு நூற்பாக் காணப்படுகிறது. மர்ரே பதிப்பு(38) தவிரப் பழைய மூலபாடப் பதிப்புகளிலும்(1417) பேரா.பால. உரைப் பதிப்புகளிலும் இச் சூத்திரம் இடம்பெறவில்லை. பால. இதைப்பற்றி, "பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்பதனுள் அவை அடங்குமாதலின், உரைத்தொடரை ஏடெழுதினோர் அங்ங்னம் கத்திரமாகப் பிரித்தெழுதினர் போலும்."(பதிப்பு 89 பக்.200)என்கிறார். இக் கருத்து ஏற்புடையதாகையால் இந்தப் பதிப்பில் அந் நூற்பா கொள்ளப்பெறவில்லை. படவெதா. "தோக்குடைய பொருள் களிறு ஆதலின் ஒன்றாகக் கோடலே நேரிது." பால, (பதிப்பு &P L+300)