பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355 பொருளதிகாரம் 1580-633 வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை 78 டி வைசிகன் என்பதே எல்லாச் சுவடிகளிலும் பதிப்புகளிலும் காணப்படுகின்ற பாடம் ஆகும். மூலத்தில் மட்டுமின்றி இளம்பூரணரின் உரையிலும், வைசிகன் வாணிகத்தான் வாழும் வாழ்க்கையைப் பெறும் என இச் சொல்லே காணப்படுகிறது. இந் நூற்பா வணிகரைப் பற்றியது என்பதில் ஐயமில்லை. ஆனால் வைசிகன் என்னும் சொல் வணிகரைக் குறிக்குமா என்பது ஆய்விற்குரியது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியிலும் (Tamil Lexicon)இச் சொல் இடம் பெறவில்லை. வைசிகன் என்னும் சொல் வேசியோடு தொடர்புடையவன் எனப் பொருள்தரும் QamāyarraGou sul Quomouslä, Lusa/JLG&pg). (Vaisika - relating to or tracting of prostitution; associating with courtezans; versed in the art of courtezans.n.harlotry, the arts of horiots - Sanskrit-English Dictionary, Monier Williams Page 1026, Vaisik -(ki ) practised by harlots; vaisiki kolam - m.k 1.4. arts practised by harkots; vaisikaha-- a person who associates with harlots, a kind of hero in erotic works, vaisikam - harlotry arts of harlots - SANSKRIT - ENGLISH DICTIONARY.P.K.Gode and C.G.KARVEPt III Page 1505) மூவகைக் காதல் நாயகரில் ஒருவனான வைசிகனின் இலக்கணத்தைச் சிங்கார ரசமஞ்சரி என்னும் மொழிபெயர்ப்பு நூல், "........பரத்தையர்தம் சரச போகம் நிரம்பவிழை கின்றசுகி தானேவை சிகன்எனலாம் நினைக்குங் காலே" (Ill - 15) எனக் கூறுகிறது. மலையாளத்திலும் வைசிக தந்த்ரம் என்னும் நூல் விலைமகளிரின் சாகசங்களைக் கூறுவதாகவே உள்ளது. (மலையாள இலக்கிய வரலாறு பக்.35) வைசிகன் என்னும் சொல் தமிழில் எங்குமே பயிலக் காணோம். ஆனால் வைசியன் என்னும் சொல்லோ எழுத்திலும், பேச்சிலும் தனித்தும், ஆரிய வைசியர். தன வைசியர். கோ வைசியர் எனச் சொற்றொடராகவும் பரவலாகப் பயிலக் காண்கிறோம். பால வைசியன் என்றே பாடங்கொண்டு கூறுவதாவது: "வைசியன் என்னும் பெயர் வீசுதல் என்னும் தொழிற்சொல் அடிப்படையாகப் பிறந்த வடசொல்லாகும். விசுவோன்-விற்போன், பல்பண்டம் பகர்ந்து வீசும்'(பட்டி) என்பதனான் அறிக. விசுவோன் வைசியன் என வடமொழியாக ஆக்கம் பெற்றதென்க. இதற்கொத்த மேலையாரியச் சொற்கள் இன்மையும் காண்க. வைசிகன் என்பது பிழையான பாடம்."(பதிப்பு 89 பக்.216) இச் சொற்பிறப்பைப் பற்றிய ஆய்வு இங்கு மிக இன்றியமையாதது அன்றாயினும் வணிகன் என்பதற்கு வைசியன் என்பதே வழக்கிலுள்ள சொல் என்பது ஒருதலை. இதுபற்றித் தி.வே.கோ. எழுதுவதாவது "வைசிகன் என்பது வேசியின் தொடர்புடையவன் என்ற பொருளே தருதலின் அது வாணிக வாழ்க்கை உடையவனைக் குறிக்காது என்பதனை உட்கொண்டு வைசியன் என்பதே நேரிய சொல் என்ற நுட்பமான செய்தி பாராட்டத் தக்கது." (மேலது பக்XII) இக் காரணங்களால் இப்பதிப்பில் வைசியன் என்பதே மூலபாடமாகக் கொள்ளப் படுகிறது. ப.வெ.தா.