பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் of 59 நனையே யுள்ளுறுத் தனையவை' யெல்லாம் மரனொடு வரூஉங் கிளவி யென்ப. 89 பா.வே. 1. முறியே தளிரே-இளம்பூரணர் பாடம். 2. கோடே-சுவடி 73 எழுத்துப் பிழை தோ > கோ 3. நனையுள் ளுறுத்த வனையவை-பேரா. பால. பாடம். 1592-645 காயே பழமே தோலே செதிளே விழோ டென்றாங் கவையு மன்ன. 90 பா.வே. 1. செதிழே-சுவடி 115 எழுத்துப் பிழை ளே > முே. செதிலே-பதிப்பு 89 அச்சுப்பிழை ளே > முே. 1593-646 நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்துங் கலந்த மயக்க முலக மாதலின் இருதினை யைம்பா லியனெறி வழாஅமைத்" திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும். 9.1 பா.வே. + 1. நிலம் நீர் தீவளி'-பால. பாடம் சுவடிச் சான்றில்லை. 2. வழாமல்-பதிப்பு 24 இல் சு.வே. 3. திரிபில்-சுவடி 115 1594-647 மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான. 92 1595-548 மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும். 5 : + ஐம்பெரும் பூதங்களும் ஒன்றனுள் ஒன்று அடங்கும் முறைபற்றிப் பால இவ்வரிசையைக் கொண்டார். ஆனால் பண்டைய உரையாசிரியர்கள் இங்கு தலைதடுமாற்றந் தந்து புணர்ந்துரைத்தல் வகையில்,"நிலம், நீர் தீ வளி, ஆகாயம் என ஒன்று ஒன்றனுள் அடங்கும் முறையில் கூறுதல் செய்யாது மயங்கக் கூறியது என்னையெனின் அவை கலக்குங்கால் ஒரே பொருளின்கண்ணும் அம் முறையானே நிற்குங்கொல் என்று கருதினும் கருதற்க மயங்கி நிற்கும் என்றற்கு அவ்வாறு கூறி எான் என்பது "(பேரா.) எனக் கொண்டனர். இவ் வரிசையும் ஏற்புடையதே. ப.வெ.தா.