பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் மரபு 5 I7. புள்ளி யில்லா வெல்லா மெய்யும் உருவுரு' வாகி’ யகரமொ” டுயிர்த்தலும் ஏனை யுயிரொ" டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல வுயிர்த்த லாறே. I7 பா.வே. 1. உருபுரு - பதிப்புகள் 47, 52 இல் க.வே. பிழை. 2. உருவுருபாகி - சுவடி 10:52, எழுத்துப்பிழை. வ ப +3, யகரமோ - பதிப்புகள் 1.5.52.87 +4. யுயிரோ - பதிப்புகள் 1,5,52.87 5 டுருபு திரிந் - சுவடி 10:44, பதிப்பு 47 இல் சு.வே. பிழை. வ > பு 19. மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. பா.வே. வழியவுயிர் - பதிப்பு 47. இதன் அடிக்குறிப்பில், வழியது நச்சர் பாடம் என உள்ளது. எல்லாப்பதிப்பிலும், சுவடிகளிலும் வழியது என்றே காணப்படுவதால் இக் குறிப்பு பொருந்தாது. 19. வல்லெழுத் தென்ப கசட தடற. 19 20. மெல்லெழுத் தென்ப ங்ஞன நமன. 20 21. இடையெழுத் தென்ப யரல வழள. 21 அவை புள்ளி பெறுவதற் கியைபில்லை என மயங்கியமையானும் வடமொழியு எளில்லாதனவாய்த் தமிழின்கனுள்ள எகர வொகரங்களின் (நெடிலுக்கும் குறிலுக்கும்) வடிவுபற்றியே விதி கூறுவதாக வெண்ணி உரையாசிரியரோ அவர்களுக்குமுன் பாடஞ் சொன்னவரோ மெய்ம்மையான பாடத்தைத் திருத்தி, "எகர வொகரத் தியற்கையு மற்றே" யென வமைத்திருக்கலாம்." என்பார் (பக். 34) + பழைய ஓலைச்சுவடிகளில் ஒற்றைக் கொம்பும். இரட்டைக் கொம்பும் ஒரே வடிவத்தில்தான் இருக்கும். பதிப்பாசிரியர்கள் தம் உச்சரிப்பிற்கேற்பக் குறிலாகவோ நெடிலாகவோ கொள்வர். மூன்றன் உருபு ஒடு தான். இதன் மாற்று வடிவமே ஒடு. மேலும் சில பகுதிகளின் உச்சரிப்பு வேறுபட்டாலும் ஒடு ஒடு ஆகலாம். இப்பதிப்பில் மிகப் பெரும்பான்மையும் ஒடு உருபே கொள்ளப்பட்டுள்ளது. பயன் இன்மையின் ஒடு பாடவேறுபாடு காட்டப்பெறவில்லை. ப.வெ.நா. h