பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.71 இரட்டிய எழுத்தொலி தெருட்டிய ஆரிய நெடுமொழிப் பாணனி மடன்இகு முதியோன் போன்ம்என இருந்தமிழ்ப் பான்மை முழுதுணர் முகட்டுயர் பொதியப் பொகுட்(டு)உழி இருந்(து) அருள் பரமா சிரியற் பல்பகல் வழிபட்டு) அரும்பெறல் இயல்பெறீஇப் பொருந்திய பன்னிரு மாணவக் குழாத்துள் நீள்நிலை கொளுவிய 20 அல்காப் பெருஞ்சீர்த் தொல்காப் பியமுனி தற்பெயர் தோற்றி யற்புறத் தந்த ஐந்திரம் நிறைந்த வியத்தகு நுண்பொருள்(ட்) தொன்மைசால் காப்பியத் துள்மரீஇப் பொதிவன பாட்டு)உரை பெறும்மேம் பாட்(டு)உடை மையினில் ஆனாக் கங்கன் மேல்நாள் வேண்டலின் சனகா புரத்துள் இளையாச் சால்பமை சன்மதி தந்த வண்மை கூர் சிறப்பிற் பவணந்தி உரவோன் துவளற வகுத்த நன்னூல் என்னும் அந்நூற் கிடந்தன பொருள்.ஒரு சேரத் தெருளுறச் சூழ்ந்து செந்தமிழ் நாடே அன்றியும் ஆந்திரம் மலாடு கருநடம் குலாவும்இ(வ்) ஆதித் தேஎத்தும் வழங்கும் திறன்திறம் பாமை ஒருமொழிக்(கு) உரியவர் அன்றியும் விரவும் ஐங்கிலி யம்முதல் அறிஞரும் ஏற்க ஆரியம் திரவிடம் ஆந்திரம் கருநடம் ஒரும்ஜங் கிலியத்(து) உரைபொதுச் சிறப்பு நடைநுத லியன அடைவிற் கற்பவர் பல்வகை நலன்அறி. மல்கும் உணர்ச்சியின் 40 உள்ளக் கிளர்ச்சியும் கொள்ளப் பெறுவன நூல்மொழி பெயர்க்கும் வாய்மையும் கருவியும் தெள்ளியோர் பயன்அடை செவ்வியுட் கொள்ளுபு நந்தியம் பொருப்பின் அந்தியும் பகலும்