பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 அருகா வளம்கெழுஉம் வருவாய்த் திரி(பு)இலா பார்வயின் இன்பு நீள்வழி உதவுறுாஉம் பால்(ற்) பெயர் ஆற்றொழுக்கு) ஏற்ப(து)எஞ் ஞான்றும் ஏனைநா(டு) அவைபோ லா(து)இரு மைக்கும் பிறவிக்(கு) எல்லை காணுாஉ நிறைவுறக் கல்ஆப்(பு) உணரும் நயனுடை நல்லோர் 50 பெட்புறும் திருவின(து) ஒட்பம்ஆர் தொண்டை நல்நாட் டிடைநீள் பல்மான் புகழ்அமை மன்னுதெண் திரைதழ் சென்னையம் பதிக்கண் நிறைகொளும் புலமைத் துறைவந் தவர்தம் குழுவகம் கவரா மகிழ்தலை சிறப்ப ஒருதான் கண்டவை பிறரும் தெரிகெனும் நீக்கம்இல் உள்ளத்(து) ஆர்வம்நன்(கு) ஊக்கத்(து) அண்டரும் பெயரிய பண்டையோர் நூல்வழிப் பன்னுதொல் காப்பிய நன்னூல் எனவும் ஐந்திர பாணி னியம் எனவும் 6 O சமரச பாடிய சித்தாந்தம் எனவும் வளம்பா(டு) இலாத இளம்பூ ரணமும் மெய்ச்சொலார் பழிச்சும் நச்சினார்க் கினியமும் வானோர் மாண்பமை சேனா வரையமும் சங்கர நமச்சி வாயமும் என்றிமை ஐந்துரை யும்தொகுத்(து) இன்புற உண்மையின் பூரண விருத்தி எனவும் பெயர்புனைந்(து) இந்நூல் இயற்றி எழுதா எழுத்தில் பல்நூல் நெறியில் பதித்து நல்கினன் - வளைநீர்க் கருங்கடல் மறிதிரை கொழிக்கும் 70 உளைவுறிஇப் பணிலம் உயிர்த்த நித்திலம் கருங்கோட் டுப்புன்னை நறுங்கேழ் அரும்பர் குருகினம் உயிர்க்கும் பரூஉமணி ஒண்கரு இஃ(து)அஃ(து)எனா அயிர்ப்புற வயின்தொறும் தொகூஉம் நறைவார் சோலைப் பிறையா(று) எனும் நகர்