பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 முறைஆற்றிப் பலபாடைச் சொற்கும் இஃ(து) ஒக்கும்என முதற்பேர் தந்தான் பிறையாற்றில் வளர்சோழ குலச்சாமு - வேல் என்னும் பெற்றி யோனே. I == ஆண்டவனால் அருள்சமயத்(து) அமைந்துபல பூசைஎலாம் அடைவே முற்றும் தாண்டவரா யக்குரிசில் தரங்கையொன்றும் பிறையா(று) ஆம் தலம்சேர் சைவன் காண்டஅருட் சாமுவேல்(ற்) காதலன் தொல் காப்பியத்தின் கருத்து நன்னூல்(ற்) தூண்டஅரும் பொருள்பகுத்தும் தொகுத்(து) அறிஞர் உவப்பவிருந்(து) உதவி னான் ஆல். 2 கி.பி. 1847 இல் வெளிவந்த மழவை மகாலிங்கையரின் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியப் பதிப்புக்கு திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தாண்டவராய சுவாமிகளின் சிறப்புப் பாயிரம். மணிநீர்ப் புவியின் வளம்சுரந்(து) ஒளிரும் அணிநீர்த் தில்லை ஆடகப் பொதுவில் பனிமலை மங்கை பார்த்(து)உளம் களிப்பத் தனிநடம் குயிற்றும் சம்புநம் பெருமான் தமருகப் பறைக்கண் அஇஉ ணுஎன்(று) அமர்தரு சூத்திரம் ஆதிசர் ஏழ்பெற வடமொ ழிக்(கு) இயல் பாணினி முனிக்குத் திடமுற நன்கு தெரித்தமை போல விந்தமும் வேலையும் வீறுபோய்க் குன்ற கந்தமென் கமலக் கரத்தினை விதிர்த்த IO அருந்தவக் கொள்கை அகத்திய முனிக்குத் திருந்(து)இசை நுணுக்கச் செந்தமிழ் இயலினைச் செப்பினன். அம்முனி தேர்ந்(து) உளம் நிறீஇ ஒப்பில்தன் பெயர்கொள் ஒருநூல் இயற்றி