பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 ஆதர வோடும் அலர்முகங் காட்டி மற்றொரு பால்செலா வகைப்பொருள் அளித்து முற்றும் புரக்கும் முதிர்கொடை யாளரில் துன்னிய வாவியும் துதைமலர்ச் சோலையும் மன்னிநல் வளம்தரும் மழவைமா நகரான் 50 சிவமறை யோர்குலம் சீர்பெறத் தோன்றிய தவம்நிறை தரும்மறைச் சைவ சிகாமணி உடையான் உடைப்பொருள் உறும்இரு பொருளும் இடையறா(று) ஒன்றும்என்(று) எழில்மறை முடிவின் விளங்குயர் சைவ விசிட்டாத் துவிதக் களங்கமின் முடிவில் கருத்துடைப் புனிதன் இயல்இசை நாடகம் எனும்முத் தமிழும் மயல்அறத் தெரிந்த மாட்சிகொள் புலவன் பரிமே லழகர்செய் பண்பு(உ)ரை தனிலும் விரிவுரை செயத்தகும் மீக்கூர் மதிஉளோன் 6 O அவையில்மற் றொருவர் அடுத்து(உ)ரை செயாமல் சுவையுறு மொழிபல சொல்மொழி வல்லோன் உத்தர மொழிமற்(று) உறுதிசை மொழியின் சத்(து) இஃ(து) எனவே தடையறத் தெரிந்தோன் என்இரு கண்ணினும் இதயமென் மலரினும் துன்னி.எக் காலமும் துலங்கிவாழ் தோன்றல் நல்லன உளஎலாம் நசையொடு நடாத்தி அல்லன உளஎலாம் அகலுற அகற்றி மகிமை பெறுமகா லிங்கையன் என்னப் புகலும் இயற்பெயர் பொருந்துநா வலனே. 70