பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377 கி.பி. 1868இல் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் எழுத்ததிகாரம் இளம்பூரணப் பதிப்பிற்கு - 1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் சிறப்புப்பாயிரம். மாமேவு புகழ்த்தொண்டை மண்டலவே - ளாளர் குலம் வளத்தால் ஒங்கப் பாமேவு கோட்டங்கள் பலவுளும்மீ - துார்க் கோட்டம் பண்பு வாய்ப்பத் துமேவு பன்னாட்டுள் அறம் உறங்கா நாடு(உ) வகை துளும்பி வாழத் தாமேவு சுகுணநிறை சுப்பரா - யக்குரிசில் தந்த மைந்தன். I ஒங்குபெரும் கல்வியறி(வு) ஒழுக்கம் எலாம் ஓர்உருக் கொண்டு) உற்றாற் போல்வான் விங்குதிரைக் கடல் உலகில் இரவலர்க்கோர் குபேரனா விளங்கும் மேலோன் நீங்குதல்இல் தன்பெயரால் பெரும்புகழோன் சைவன்என நிலவச் செய்வோன் பாங்குபெறு தமிழ்நயம்தேர் கன்னியப்பன் எனும்பெரும்பேர்ப் பண்பின் மிக்கோன். 2 குறுமுனிபால் இயற்றமிழ்தேர் புலவருள் ஒங் - கிய புலமைக் குன்றம் அன்னோன் நிறுவுதொல்காப் பியமுனிவன் றன்பெயரால் தரும்இயல்நூல் நிலவ மண்மேல் அறுதிபெறச் செயும்இளம்பூ ரணர்உரையுள் அமைதிபெற அலை(வு) அற்(று) ஒங்கும் மறுவுதவிர் எழுத்துரையைப் புலவர்உளம் களி சிறக்கும் வகைமை தேர்ந்து 3.