பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JB I 3. திரிசிரபுரம் பெரியண்ணப் புலவர் இயற்றியது கலைமணக்கும் தமிழ்மலையத் தவன்பால்கற்(று) உணர்ந்தஅருட் கதிப்பு(உ)ற் றோங்கு நிலைமணக்கும் முனிவரன்தன் பெயரால் இந் நிலவரைப்பில் நிலவச் செய்த தலைமணக்கும் இயல்தொல்காப் பியன்எழுத்ததிகாரம் தன்னோ(டு) இம்பர்த் துலைமணக்கும் அதனுரையாய் விளங்கும் இளம் - பூரணத்தைத் துகளற்(று) ஆய்ந்து I துன்னுபெரும் கல்விஅறி(வு) ஒழுக்கம்மிகு வாய்மைஅருள் துய்மை மிக்கோன் மன்னுசிவ பத்திஒரு வடிவாய்வந்(த) தென் உலகில் வயங்கு நல்லோன் மின்னுபகழ் அவதானி சுப்பரா - - யப்புலவன் விரும்பி மேய பன்னுடல வோர்உவகைத் தேன்மடுத்துக் களி சிறப்பப் பரிவின் நல்க. 2 புண்ணியமே மலிதொண்டை மண்டலவே - ளாளர் குலம் பொலிவு மேவ அண்ணியவி துார்க்கோட்டத்(து) அவதரித்த கற்பகமே அனையான் ஏற்போர் எண்ணியன் லாம்கொடுக்கும் கரதலத்தான் கன்னியப்ப இசைவ லாளன் பண்இயல்தன் புகழ்பரப்பல் போல்.அச்சில் பதிப்பித்துப் பரப்பி னான்.ஆல். 3