பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.4 சுவடி எண் 1. 11. 15. பிறசெய்திகள் சொல் மற்றும் பொருள். நச்சர். பேரா. உரை 18 X 1.25 அங்குலம், 1078 பக். பக்கத்திற்கு 9வரி, நல்ல நிலை; சொல். முழுவதும் நச்சர் உரையும் பொருளதிகாரத்தில் அகம். முதல் களவு. முடிய நச்சர் உரையும், செய்யுளியலுக்கு மட்டும் பேரா. உரையும் உள்ளன. ஏனைய இயல்கள் இல்லை. கலியுகாதி 4981 பிரமாதிவருஷம் திருமயிலையில் ஆ. குமாரன் அண்ணாசாமி உபாத்தியாயர் எழுதி நிறைவேறினது. (இது கி.பி. 1880) பொருள். நச்சர். உரை. அகம் முதல் உவமம் முடிய; இடையில் பல பகுதிகள் இல்லை. எழுத்து. சொல். நச்சர் உரை 18.75 x 1.50 அங்குலம்; 706 பக் பக்கத்திற்கு 8 வரி; சிதைந்துள்ளது. முழுமை. "இச் சுவடியிறுதியில் தம்பி தாண்டவ மூர்த்தி சாதகம் என்பதில் 899 பவ வருடம் என்றுள்ளது. எனவே இச்சுவடி கி.பி. 1724இல் எழுதப்பெற்றிருக்கலாம். இது நெல்லை மாவட்டச்சுவடி ஏடு தைக்கப்பெற்றுள்ளது. ஒலைகள் 334, 335 இரண்டும் இல்லை. அதனால் எச்சவியலில் (சொல்) 415, 416ஆம் நூற்பாக்களுக்கு உரையில்லை. எழுத்தில் 26 முதல் 53, 104, 105, 170, 171, 211. 212, 213, 214 இல் ஒரு பகுதி இல்லை" என்பார் ச.வே.சு. பொருள். நச்சர். பேரா. உரை 19 x 1.5 அங்குலம்; 724 பக் நல்லநிலை; பழமையானது. ஐந்தாமியல் உரைமுடிவின் நச்சினார்க்கினியர் காண்டிகை என்ற குறிப்பு உள்ளது. ஆனாள் ஒன்பதாம் இயலின் முடிவில் இத்தகைய குறிப்பு இல்லை. பொருள் முழுவதற்கும் உரையுள்ள ஒரே சுவடி இது.